தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க…இளநரை பிரச்சனையை சுலபமாக போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

வீட்டு வைத்தியங்கள் என்றாலே அது சரும பராமரிப்பிற்கு மட்டும் தான் சிறந்தது என்ற தவறான அபிப்ராயம் பொதுவாக உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. கூந்தல் பிரச்சனைக்கும் வீட்டு வைத்தியங்கள் சிறந்த தீர்வினை மிக சுலபமாக வழங்கிட முடியும். கூந்தல் வளர்ச்சி முதல் கூந்தலை வலிமையாக்குவது, மிருதுவாக்குவது என அனைத்திற்குமே வீட்டு வைத்தியத்தில் தீர்வுண்டு. அந்த வகையில், பெரும்பாலானவரை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடிய பிரச்சனை தான் இளநரை. நரை முடி என்பது வயதாவதை குறிப்பதாகும். குறிப்பாக, 20 முதல் 22 வயத்திற்குள் பெரும்லானோர் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

இளம் வயதில் 2 அல்லது 3 நரை முடி இருந்தால் அது ஒன்றும் பிரச்சனையே கிடையாது. ஆனால், அதிக அளவில் நரை முடி இருந்தால் அதனை உடனே கவனித்து தீர்வு பெற்றிட வேண்டியது அவசியம். இத்தகைய இளநரை பிரச்சனை ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மனஅழுத்தம், பரம்பரை பிரச்சனை, மோசமான உணவு பழக்கம், வயதானவது போன்ற பல்வேறு காரணங்களால் இளநரை பிரச்சனை ஏற்படக்கூடும்.

 

இத்தகைய இளநரை பிரச்சனையை, சில வீட்டு வைத்திய முறைகளின் உதவியோடு சரிசெய்திடலாம். மேலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்சனை ஏற்படாமல் தடுத்திடவும் முடியும். அவற்றை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்….

இளநரை பிரச்சனைக்கான வீட்டு வைத்தியங்கள்:

இளநரை என்பது இளம் வயதினருக்கு மட்டுமல்ல, சிறு குழந்தைகளுக்கும் கூட ஏற்படுகிறது. வீட்டில் இருந்தபடியே, அவற்றிற்கு சிகிச்சை அளித்திடலாம். அப்படி அவை உங்களுக்கு சரியான தீர்வினை வழங்கிடவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பார்க்கலாம்…

பிளாக் காபி

இது சற்று சுவாரஸ்மானது தான். இளநரை பிரச்சனைக்கு பிளாக் காபி மிகச் சிறந்த முறையில் தீர்வு வழங்கிடும். எனவே, இளநரையை போக்க வேண்டுமென்றால், இதனை தாராளமாக முயற்சித்து பார்க்கலாம். அதற்கு சில கப் காபியை முடியில் தடவ வேண்டும், அவ்வளவு தான். இப்படியே சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல வித்தியாசத்தை பார்க்கலாம். ஒரு வாரம் செய்மு பாருங்கள் உங்களுக்கு புரியும்.

பிரிங்கராஜ்

பிரிங்கராஜ் அகா எனப்படும் டெய்ஸி கூந்தலுக்கு சாயமிடுவதற்கோ அல்லது வண்ணமயமாக்குவதற்கோ உதவுவதில் மிகவும் பிரபலமானது. இது ஒரு இயற்கையான மூலப்பொருள் ஆகும், இது மெலனோஜெனீசிஸை மேம்படுத்துவதோடு, வெள்ளை முடியை மாற்றியமைக்கவும் உதவும் பயோஆக்டிவ் கூறுகளையும் கொண்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் இதனை பயன்படுத்திட வேண்டாம்.

கறிவேப்பிலை

பிரிங்கராஜைப் போலவே, கறிவேப்பிலையிலும் பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், சிறு வயதிலேயே ஏற்படக்கூடிய நரை முடியைத் தடுக்கவும் உதவுகின்றன. இதை அரைத்து, சிறிது எண்ணெயுடன் சேர்த்து சூடேற்றி ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணெயை தடவி வரவும்.

நெல்லிக்காய்

முடி பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்திய பொருட்களுள் ஒன்று தான் நெல்லிக்காய். இது தலைமுடியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நரைப்பதைத் தடுத்திடவும் உதவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் இதனை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்

கிட்டத்தட்ட எல்லா வகையான இயற்கை தீர்விலும் இந்த எண்ணெய் நிச்சயம் இடம் பிடிக்கும். தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் தோல், உதடுகள், நகங்கள், முடி மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும் மேம்படுத்த இந்த எண்ணெய் உதவக்கூடியது. குறிப்பிட்ட விஷயத்திற்கு தான் இதனை பயன்படுத்த வேண்டுமென்ற எவ்வித விதிமுறைகளும் தேங்காய் எண்ணெய்க்கு கிடையாது. தேங்காய் எண்ணெயில் அதிகம் உள்ள ஊட்டமளிக்கும் பண்புகள், அடர்த்தியான மற்றும் உலர்ந்த நரை முடியை பராமரிக்கவும் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. உங்கள் தலைமுடியை மெதுவாக அவற்றின் இயற்கையான நிறத்திற்கு கொண்டு வரும்.

சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையை தடுக்க உதவும் குறிப்புகள்:
சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையை தடுக்க உதவும் குறிப்புகள்:
ஒன்றும் அவ்வளவு கால தாமதம் ஆகிவிடவில்லை. இப்போதிருந்தே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற துவங்கினால், இளநரை பிரச்சனை என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்றாட வாழ்வில் நீங்கள் தொடர்ந்து செய்து வரும் சிறு விஷயம் கூட, பெரும் பிரச்சனைக்கு காரணமாக நேரிடலாம். எனவே, அவற்றில் கவனம் செலுத்தி, அவற்றை மேற்கொண்டு செய்யாதிருக்கும் பட்சத்தில் இளநரை பிரச்சனையை தடுத்திடலாம். வாருங்கள், இப்போது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்…

* உங்களது உடலின் தைராய்டு அளவை சீரானதாக வைத்திருக்க வேண்டியது அவசியம்

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்திடவும்

* ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள மறவாதீர்

* இளநரை பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கேற்ப முறையான சிகிச்சையை மேற்கொள்ளவும்

* மருத்துவ உதவிக்குறிப்புகள் அல்லது மருந்துகளை தெரிந்து சரியான முறையில் உட்கொள்ள மருத்துவரை அணுகவும்

முடிவுரை

சிறு வயதிலேயே உங்கள் தலைமுடி சாம்பல் அல்லது வெள்ளை நிறமாக மாறாமல் பாதுகாக்க சில வீட்டு வைத்தியம் மற்றும் உதவிக் குறிப்புகளை பற்றி இப்போது பார்த்தோம். இவற்றை முயற்சிப்பதற்கு முன்பு, அதிக மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் அது உடனடியாக உங்களது உடலழகில் ஏற்படக்கூடிய மாற்றத்தை கண்கூடாக காட்டும். கருவளையம் முதல் வெள்ளை முடி பிரச்சனை வரை, அதிகப்படியான பதற்றம் தான் அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகமாக பாதிக்கக்கூடும்.

Related posts

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! என்னென்ன செய்யலாம் கருமையான கூந்தலை பெற..!

nathan

ந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்

nathan

கூந்தலை வளரச் செய்யும் மூன்று இயற்கையான கண்டிஷனர்

nathan