c0e86c
ஆரோக்கிய உணவு

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றுபுண்ணை குணமாக்கும் அத்திக்காய்.. பொரியல் செய்வது எப்படி?

அத்திக்காய் சாப்பிடுவதால் வயிற்றுப் புண் குணமாகிறது. மேலும், இந்த அத்திக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே வயிற்றுப்புண் உள்ளவர்கள் பூரண குணமடையலாம்.

இதுமட்டுமின்றி இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வாயு பிரச்சனை, மூலகிரணி ஆகிய பிரச்சினைகளும் குணமாகும். இந்த அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்…

 

தேவையான பொருட்கள்

அத்திக்காய்
பயத்தம் பருப்பு
தக்காளி
பூண்டு
பச்சை மிளகாய்
உப்பு
எண்ணெய்
வெங்காயம்
கடுகு
கருவேப்பில்லை

செய்முறை

முதலில் அத்திக்காயை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு குக்கரில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் அதனுடன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன்பின்னர், இதனுடன் பயத்தம்பருப்பு சேர்த்து, இடித்து வைத்துள்ள அத்திக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை மூடி வைத்து நன்றாக வேகவிடவும். பின் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து இந்த அவியலை அதனுடன் சேர்த்து கிளறினால் அட்டகாசமான அத்திக்காய் பொரியல் தயார்.

Related posts

உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுக்கும் பச்சை பயறு புட்டு

nathan

மங்குஸ்தான் பழத்தின் மகத்துவங்கள்

nathan

பி.பி, சுகர்னு அத்தனையையும் விரட்டி “குட்பை“ சொல்லும் அதிசய பழம்!

nathan

உளுந்து சப்பாத்தி

nathan

நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மல்கோவா மாம்பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொத்தவரைக்காய்..!

nathan

இந்த 10 உணவுகளுடன் எளிதாகத் தவிர்க்கலாம் முழங்கால் மூட்டுவலி..!

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!தெரிஞ்சிக்கங்க…

nathan