மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள்!

பெண்கள் தங்கள் வாழ்வில் பல கட்டங்களில் குண்டாவார்கள். அதில் திருமணத்திற்கு பின் மற்றும் பிரசவத்திற்கு பின் போன்ற காலங்களில் குண்டானால், அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். இருந்தாலும், சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால், கண்ட இடங்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கலாம்.

இங்கு பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, ஒவ்வொரு பெண்ணும் தங்களது பிரசவத்திற்கு பின் பின்பற்றி வந்தால், தொப்பையை வேகமாக குறைத்து, தன் பழைய உடலமைப்பைப் பெறலாம்.

குழந்தையுடன் வாக்கிங்

குழந்தையுடன் ஏரியோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடலாம். அதுமட்டுமின்றி, தினமும் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துக் கொண்டு மெதுவாக 1 மைல் தூரம் நடந்தால், 100 கலோரிகளை எரிக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஸ்குவாட்ஸ்

சுவற்றில் சாய்ந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று 10 நொடிகள் இருக்க வேண்டும். பின் எழ வேண்டும். இப்படி தினமும் 20-25 முறை செய்தால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

சேது பந்தா சர்வங்காசனம்

தரையில் படுத்துக் கொண்டு, பாதத்தை தரையில் பதிக்குமாறு முழங்காலை மடக்கி, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் படத்தில் காட்டியவாறு உடலை மேல் நோக்கி தூக்கி, பாலம் போன்ற நிலையில் இருக்க வேண்டும். இப்படி 5-6 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை தினமும் 4-5 நிமிடம் செய்து வந்தால், தொப்பையைக் குறைக்கலாம்.

யோகா பயிற்சி

தினமும் யோகா பயிற்சியை செய்வதன் மூலமும் அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். அதிலும் கும்பகாசனம், ஹஸ்தபடோடாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றை மேற்கொண்டால், தசைகள் இறுகி வலிமையடையும்.

தாய்ப்பால் கொடுக்கவும்

ஆம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எப்படியெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது, ஆக்ஸிடோசின் வெளியிடப்பட்டு, கருப்பை சுருங்கி, பழைய நிலைக்கு வேகமாக மாறி, வீங்கி காணப்படும் வயிற குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button