அசைவ வகைகள்அறுசுவை

கொத்து பரோட்டா

Chilli Porottaதேவையான பொருட்கள்

பரோட்டா – 6
முட்டை – 4
வெங்காயம் – 1
தக்காளி – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா – 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்

Related posts

மசாலா முட்டை ரோஸ்ட்

nathan

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

nathan

சுவையான பஞ்சாபி சிக்கன்

nathan

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

nathan

மாட்டு இறைச்சி சமோசா

nathan

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

nathan

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan