சரும பராமரிப்பு

இளமையுடன் இருக்க சருமத்தில் உள்ள இறந்த செல்களை எளிதில் நீக்கணுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

ஒவ்வொரு பெண்ணின் கனவும் அழகான பொலிவான சருமத்தை பெறுவது தான். இளமையுடன் இருக்கவும், பளபளப்பான சருமம் பெறவும் ஆயிரக்கணக்கில் செலவழித்து சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி அழகை பராமரிக்க பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த பொருட்கள் உண்மையில் நன்மை அளிக்கின்றதா? இந்த பொருட்களை பயன்படுத்துவதால் பெண்களின் சருமம் பொலிவடைகின்றதா? ஆம் என்று சிலர் கூறினாலும், இல்லை என்பதே பலரின் பதில். ஆனால் பெண்களின் சருமத்திற்கான தீர்வு இயற்கை பொருட்களில் உள்ளது.

அப்படி ஒரு இயற்கை பொருள் கருப்பு உப்பு. கருப்பு உப்பு அழகை அதிகரிக்கும் ஒரு சிறந்த மூலப்பொருள். ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமம் பெற கருப்பு உப்பு உதவுகிறது. இறந்த அணுக்கள் படிந்திருக்கும் சருமத்தை சுத்தம் செய்து சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து பொலிவை கூட்டுகிறது. கருப்பு உப்பை முகத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மேலும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேன் மற்றும் கருப்பு உப்பு

தேனுக்கு ஈரப்பதம் அதிகரிக்கும் தன்மை உள்ளது. எல்லா வித சருமத்திற்கும் ஏற்ற ஒரு இயற்கையான மூலப்பொருள் தேன். கருப்பு உப்புடன் தேன் கலப்பதால் இயற்கை முறையில் சருமம் எக்ஸ்போலியேட் செய்யப்பட்டு ஈரப்பதமும் பெறுகிறது.

செய்முறை:
செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்க்கவும்.

* உப்பு கரையும் வரை நன்கு கலக்கவும்.

* இந்த விழுதை முகத்தில் தடவவும்.

* 10 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

* ஒரு வாரத்தில் 2-3 முறை இதனை செய்வதால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் கருப்பு உப்பு

இந்த கலவை ஒரு சிறந்த ஸ்க்ரப் ஆகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சருமத்தின் வறட்சியைப் போக்க இந்த ஸ்க்ரப் உதவுகிறது. பாதாம் எண்ணெய் ஈரப்பதம் அளிக்கும் பண்புகளைக் கொண்டது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* ஒரு பௌலில் மூன்று பங்கு பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு பங்கு கருப்பு உப்பு சேர்க்கவும்.

* இந்த விழுதை முகத்தில் தடவி நன்கு காய விடவும்.

* பாதாம் எண்ணெய்க்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

* 10 நிமிடம் கழித்து குழாய் நீரில் முகத்தைக் கழுவவும்.

ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பு ஸ்கரப்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதால் சருமம் தளர்த்தப்பட்டு, முகத்தில் உள்ள எண்ணெய் மற்றும் சீபம் சுரப்பு ஆகியவை சமநிலை அடைகிறது.

செய்முறை:

* ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து கலக்கவும்.

* இந்த கலவையில் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஒரு அடர்த்தியான விழுதாக்கவும்.

* இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விடவும்.

* பின்னர் உங்கள் கைவிரல்களால் முகத்தில் மென்மையாக சூழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.

* பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்.

* வாரத்திற்கு இரண்டு முறை இதனை பயன்படுத்துவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு:

சருமத்தில் எரிச்சல் உணரப்பட்டால், பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தலாம். இதனால் எரிச்சல் குறையும். முகத்தை கழுவிய பின் பன்னீர் கொண்டு முகத்தை கழுவுவதால் சருமத்தில் குளிர்ச்சி பரவும்.

எலுமிச்சை மற்றும் கருப்பு உப்பு ஸ்க்ரப்

முகத்தில் கரும்புள்ளி, வெண்மையான புள்ளி, பருக்கள் போன்றவை இருக்கிறதா? உங்களுக்கு ஏற்ற தீர்வு இது. எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்ட் பண்புகள் மற்றும் கருப்பு உப்பில் உள்ள எக்ஸ்போலியேட் தன்மை ஆகியவை இணைந்து சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைக்கும்.

செய்முறை:

* ஒரு பௌலில் எலுமிச்சை சாறு இரண்டு பங்கு மற்றும் கருப்பு உப்பு ஒரு பங்கு எடுத்துக் கொள்ளவும்.

* இந்த விழுதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.

* பின் சாதாரண நீரால் முகத்தைக் கழுவவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button