ஆரோக்கியம் குறிப்புகள்

அழகு சாதனப்பொருட்களால் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள்

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை.

அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம். கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.

இது புற்றுநோய், குழந்தையின்மை, ஹோர்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம். முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி விடும். இதில் 15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது, தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும். இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
279f0633 5391 41e9 90ec 61d52160ba9f S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button