30.8 C
Chennai
Monday, May 12, 2025
7916
Other News

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க எளிய வழிகள்

பல் சொத்தை ஏற்பட்டால் அதனால் வரும் வலியை தாங்கவே முடியாது.

சில வழிமுறைகளை பின்பற்றினால் பல் சொத்தையை தடுக்க முடியும்.

காலை, இரவு என 2 வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களை கீழ்நோக்கி சுழற்றியும், கீழ் தாடை பற்களை மேல் நோக்கி சுழற்றியும் துலக்க வேண்டும்.

பல் தேய்க்க பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல் உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. பல் துலக்கியை பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.

வைட்டமின் – சி, வைட்டமின் – டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

பற்களில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

காபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிக குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்க்கலாம்.

Related posts

கள்ள உறவு.. பாலா மனைவியின் அபாஷன் நாடகம்!

nathan

நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள்

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan

வசூல் வேட்டை.! 5வது நாள் முடிவின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.!

nathan

கருப்பு திராட்சை தீமைகள்

nathan

கணவருடன் பொங்கலை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்..

nathan

ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்

nathan

அம்மாடியோவ் என்ன இது? அழகு சீரியல் நடிகை ஸ்ருதி நடித்த மோசமான படம் தெரியுமா.. பட லிங்க் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

nathan

வேக வைத்த முட்டையால் உடம்பில் ஏற்படும் அற்புதம்: தெரிஞ்சிக்கங்க…

nathan