30.8 C
Chennai
Sunday, May 11, 2025
240 baby3
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஐயோ குழந்தை அழுதே! என்ன செய்யலாம்?

குழந்தை அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். விடாது தொடர்ந்து அழுதால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

மற்றபடி வயிற்று வலியாலும், அசௌகரியமான சூழ் நிலையாலும் குழந்தை அழலாம். இதற்கு பயப்படத் தேவையில்லை.

பொதுவாக குழந்தைகள் பசியாயிருந்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, சோர்வடைந்தாலோ, நொந்துபோனாலோ அல்லது மகிழ்ச்சியில் கூட அழுவார்கள். அப்படி உங்கள் குழந்தை அழைத்த தொடங்கினால் என்ன செய்யலாம் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

வழி 1 :

சில நேரங்களில் குழந்தைக்கு பசித்தால் அவர்கள் அழுவார்கள். எனவே உணவு வேளைகளில் அவர்கள் அழுதால் அவர்களுக்கு உணவளியுங்கள்.

வழி 2 :

உங்கள் குழந்தை விரல் சூப்பினால் அந்த பழக்கத்தில்ருந்து விடுவிக்கச் செய்யுங்கள். அவை ஆரோக்கியம் மற்றும் பற்களுக்கு நல்லதல்ல.

விரல் சூப்புவதை நிறுத்தும்போது அழுதால் அவர்களுக்கு மாற்றாக பால் பாட்டிலை தந்து பாருங்கள்.

வழி 3 :

சில நேரங்களில் தனிமையில் இருப்பதாக உணர்ந்தாலும் குழந்தைகள் அழும். அப்படியானால் அவர்களை கட்டி அரவணைத்து அவர்கள் பாதுகாப்பை உணருமாறு செய்யுங்கள்.

வழி 4:

சில சமயங்களில் குழந்தையை வெளியில் அழைத்து செல்வதும் அழுகையை நிறுத்த உதவும். அவர்களுக்கு பொழுபோக்கில்லாதபோது அவர்கள் அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அவர்களை மெல்ல தூக்கிக் கொண்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்துவிட்டு வாருங்கள்.

வழி 5:

அழும் குழந்தையை சமாளித்து அவர்கள் கவனத்தை திருப்ப பொம்மைகளும் உதவும். அதனால் எப்போதும் பொம்மைகளை கைவசம் வைத்திருங்கள்.

வழி 6:

சில நேரங்களில் வானிலையும் அவர்கள் அழுவதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தை உள்ள அரை மிகுந்த சூடாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வழி 7:

மேற்கூறப்பட்ட எதுவும் பயன் தர வில்லையென்றால் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். செரிமானக் கோளாறுகளும் குழந்தையை சிலநேரங்களில் அழவைக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…சானிடைசர் உபயோகிப்பதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

குழந்தைகளின் வயதுக்கேற்ற பொம்மைகள்

nathan

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

ஒருவருக்கு தினமும் 8 மணிநேர தூக்கம் ஏன் அவசியம் என்று தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் குழந்தைகளிடன் தாய் இதை பற்றி எல்லாம் பேச தயங்க கூடாது!

nathan

அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்… எண்ணெய்! மருத்துவர் கு.சிவராமன்

nathan

நீங்கள் கவனிக்க வேண்டிய 4 அறிகுறிகள்! உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வருகிறதா?

nathan

உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…மனமானது சோர்ந்து போயிருக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

nathan