மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உடலில் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன?

நமது உடலில் ஏற்படுகின்ற நச்சுத்தன்மை சேர்ந்து அவை செரிக்கப்பட இயலாத காரணத்தால், உடலில் நச்சு நீராக மாறுகிறது. இவையே, இரத்த ஓட்டத்தைத் தடை செய்து உடலில் ஆங்காங்கே கட்டிகளாக வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

சாதாரண வகைக் கட்டிகளில் கொழுப்புக் கட்டி, நார்க் கட்டி மற்றும் நீர்க் கட்டி எனப் பல வகைகள் இருக்கிறது. இப்படி காணப்படும் கட்டிகள் மற்றும் வீக்கங்களில் பொதுவாக வலி இருக்காது, ஆனால் சிலருக்கு அந்தக் கட்டிகளின் தன்மைகளால் சற்று மன வேதனை ஏற்படும்.

சுகாதாரமற்ற செயற்கை வாசனை அதிக அளவில் சேர்க்கப் பட்ட அதிக காரத் தன்மை கொண்ட கொழுப்பு வகை உணவுகள் அதிகம் சாப்பிடுவது, அதிக எண்ணெய்ப் பிசுக்குகள் காரணமாக, சிலருக்கு அதிக உடல் சூட்டினாலும், சூட்டுக் கட்டிகள் வரலாம். சிலருக்கு நீரிழிவு பாதிப்பின் காரணமாக, ஏற்படலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மேலும் சிலருக்கு, அதிக அளவிலான மதுப் பழக்கத்தின் மூலம் உடலில் ஏற்பட்ட நச்சுத் தன்மை அதிகரிப்பின் காரணமாக ஏற்படலாம். அதிக உடல் எடையின் காரணமாகவும் சிலருக்கு கட்டிகள் ஏற்படலாம், மேலும், பல்வேறு வகை கட்டிகள் மற்றும் வீக்கங்கள் நடுத்தர வயது ஆண்களையே, அதிகம் பாதிக்கின்றன.

கட்டிகள் உடலிலோ அல்லது முகத்திலோ காணப் பட்டால், எருக்கன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெய் இட்டு சூட்டில் வதக்கி, அந்த இலையை, கட்டி அல்லது வீக்கத்தில் வைத்து இரவில் கட்டிவர, அவை சரியாகும்.

சிறிதளவு தேன் மற்றும் சிறிது சுண்ணாம்பு எடுத்து நன்கு கலக்கி, அந்தக் கலவையை கட்டிகளின் மேல் பூசலாம். உடையாத கட்டிகளுக்கு வாழைப்பழத்தை குழைத்து கட்டியின் மீது பூசிவர கட்டி பழுத்து உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.

மஞ்சளை இழைத்து அந்த மஞ்சளுடன் சலவை சோப்பை சேர்த்து கலக்க, கருஞ்சிவப்பு நிறத்தில் அந்தக் கலவை மாறும். அதனை எடுத்து கட்டி உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button