போசு பால் புஷ் அப்ஸ் பயிற்சி

ஒரு பயிற்சி எடுக்கவே எனக்கு நேரம் போதலை என்று புலம்புபவர்களுக்கு, போசு பால் என்ற ஒரு ஃபிட்னெஸ் கருவியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பிரச்னைகளையும் தீர்க்கமுடியும். போசுபால் பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.

இந்த பயிற்சி செய்ய விரிப்பில் இரண்டு கைகளையும் போசு பால் மீது ஊன்றியபடி, கால்களை நீட்டிக் கொள்ளவும். உடலை மேலே உயர்த்தி சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க வேண்டும். பிறகு, உடலை கீழே தரையோடு கொண்டு வரவும். இதுபோல் தொடர்ந்து 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்: உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். தலை முதல் கால் வரை அனைத்து பகுதிகளையும் சீரான செயல்பாட்டில் வைத்திருக்கும்.

போசு பாலை திருப்பி வைத்துக் கொண்டு, இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும். கால்களை மட்டும் தரையில்படும் அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே நிலையில் இருந்தபடி, உடலை மட்டும் உயர்த்தி மீண்டும் சம நிலைக்குக் கொண்டு வர வேண்டும். உடல் தரையில் படாதவாறு பார்த்துக் கொள்ளவும். இதுபோல் 15 முறை செய்யவும்.

பலன்கள்: மார்புப் பகுதிகள் வலுவடையும். உடலில் உள்ள அனைத்து மூட்டுகளும் வலுவடையும்.

Leave a Reply