அலங்காரம்மேக்கப்

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

winter-makeup-tips_thumb[3]ஆள் பாதி ஆடை பாதி என்றிருந்த காலம் போய் ஆள் கால், மேக் அப் முக்கால் என்றாகி விட்டது. சுமாராக இருப்பவர்கள் கூட மேக் போட்டு சூப்பராக தேற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக இருப்பவர்கள் வெளியில் ஏதாவது பார்ட்டி அல்லது அலுவலகத்திற்கோ கிளம்பினால் மேக் அப் போட்டுப் பட்டையைக் கிளப்பத் தவறுவதில்லை.

நாம் பயன்படுத்தும் உடையைப் போலவே தேர்ந்தெடுக்கும் மேக் அப் சாதனமும் நம்மை உயர்த்தி காட்டும். இருப்பினும் ஆடை உடுத்துவது எப்படி ஒரு கலையோ அதுபோல மேக் அப் போடுவதும் ஒரு கலைதான். எனவே எப்படி மேக் போடுவது என்பது குறித்து அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை படியுங்கள். அதற்கேற்ப உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

சாதாரண நிறத்திற்கான அழகு

மேக் அப்பிற்கு முதலில் தேவை பவுண்டேசன் எனப்படும் அடிப்படை முகப்பூச்சு. தரமான பவுண்டேசன் கேக் தேர்வு செய்வது அவசியம். ரசாயணங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தேர்வு செய்வதை விட இயற்கை பொருட்களில் தயார் செய்யப்பட்ட மேக் அப் சாதனங்களை தேர்வு செய்வது முகத்திற்கு பாதுகாப்பானது.

சாதாரண நிறத்திற்கு ஏற்ப லேசான கலராகவோ அல்லது கோல்டன் கலர் டோன் வரக்கூடிய மேக் அப்களை தேர்வு செய்ய வேண்டும். பிங்க் நிறத்தை தரக்கூடிய மேக் அப் சாதனங்களை தவிர்ப்பது நல்லது.

பவுண்டேசன் போடும் முன்பாக முகத்தை எண்ணெய் பசை இன்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கண்களும், உதடும்

முகத்திற்கு அழகூட்டக் கூடியவையான கண்களுக்கும், இதழுக்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். கண்களுக்கான ஷேடோ, உதட்டிற்கு தேர்ந்தெடுக்கும் லிப்ஸ்டிக் ஆகியவற்றில் தனி கவனம் தேவை. நேவி புளு, சாக்லேட் ப்ரவுன் போன்ற கலர்கள் கண்களின் ஷேடோவிற்கு ஏற்றது. உதட்டின் கலருக்கு ஏற்ப லிப்ஸ்டிக் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். உதட்டிற்கு அவுட்லைன் வரைந்து பின்னர் தகுந்த கலரினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அலுவலகத்தில் லஞ்ச் மீட்டிங் என்றால் அதற்கேற்ப திக்காக லைன் வரைந்து கிரீம் கலர் லிப்ஸ்டிக் உபயோகிக்கலாம். அதே சமயம் டின்னர் மீட்டிங்கிற்கு போகும் போது லிப் கிளாஸ் மட்டுமே உபயோகிப்பது நலம். அதேசமயம் கண்களின் மேக் அப்பிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படிச் சின்னச் சின்ன மேக்கப் டிப்ஸ்களை கடைப்பிடிப்பதன் மூலம் எழிலுக்கு எழிலூட்டலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button