அழகு குறிப்புகள்

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

ஸ்வைன் இன்ஃப்ளூயென்ஸா எனப்படும் பன்றிக் காய்ச்சல் ஒரு சுவாச சம்பந்தப்பட்ட நோயாகும். இன்ஃப்ளூயென்ஸா கிருமிகளால் ஏற்படும் இந்த நோய் பன்றிகளின் சுவாச பாதையை தான் பொதுவாக பாதிக்கும். பரவும் தன்மையை இந்த கிருமி கொண்டுள்ளதால், மனிதர்களிடம் இது சுலபமாக பரவி விட்டது. இருமல், சோர்வு, குமட்டல், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் உடல் வலிகள் போன்றவைகள் மனிதர்களுக்கு இந்த நோயால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

ஆயுர்வேத மருத்துவ அமைப்பில் பன்றிக் காய்ச்சலை வட கப்ஹாஜ் ஜ்வாரா என அழைக்கப்படுகிறது. காற்று (வட) மற்றும் தண்ணீரால் (கப்ஹா) ஏற்படும் சீர்கேடுகளால் இது ஏற்படுகிறது. இது நம் சுவாச அமைப்பை பாதித்து, காற்றுச் செல்வழி அலைவரிசைகளை தடுத்து இருமல், குமட்டல், உடல் வலிகள் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.

பன்றிக் காய்ச்சல் உட்பட, எந்த ஒரு ஃப்ளூ கிருமியாக இருந்தாலும் சரி, அவைகளை கையாள சில எளிய வழிமுறைகள் உள்ளது. அவைகளைப் பற்றி தான் நாம் விரிவாக பார்க்கப் போகிறோம். இவை அனைத்தையுமே ஒன்றாக பின்பற்ற வேண்டும் என்றில்லை. இதில் உங்களுக்கு எது சிறந்ததாக உள்ளதோ அவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, பின்பற்றலாம். இருப்பினும் நீங்கள் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தீர்கள் என்றால், இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஓரளவிற்கு மட்டுமே கைக்கொடுக்கும். அதுவும் H1N1 கிருமியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

துளசி இலைகள்

நன்றாக கழுவப்பட்ட ஐந்து துளசி இலைகளை தினமும் காலையில் உண்ணுங்கள். துளசியில் பல விதமான சிகிச்சையளிக்கும் குணங்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் தொண்டையையும் நுரையீரலையும் சுத்தமாக வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களை அண்ட விடாமலும் உதவும்.

சீந்தில் கொடி

சீந்தில் கொடி (மருத்துவ பெயர்: டினோஸ்போரா கார்டிஃ போலியா) என்பது பல இடங்களில் பொதுவாக காணப்படும் செடியே. இச்செடியின் 1 அடி அளவை கொண்ட கிளையை எடுத்து, அதனுடன் 5-6 துளசி இலைகளை சேர்த்து, தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். அல்லது அந்த செடிகளின் குணங்களை தண்ணீர் உறிஞ்சும் வரை கூட கொதிக்க வைக்கலாம். அதனுடன் கருப்பு மிளகு, விரதம் இருக்கும் போது பயன்படுத்தும் உப்பு, சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு அல்லது மிஸ்ரி என்ற உப்பை சேர்த்துக் கொள்ளவும். அது ஆரிய பிறகு அதனை வெதுவெதுப்பான நிலையில் பருகவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக இது மேம்படுத்தும். சீந்தில் கொடி செடி கிடைக்கவில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட சீந்தில் கொடி பொடியை வாங்கி அதனை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.

கற்பூரம்

ஒரு மாத்திரை அளவிலான சிறிய கற்பூர துண்டை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் என்றால் அதனை தண்ணீரில் கொண்டு விழுங்கி விடலாம். குழந்தைகளால் அதனை அப்படியே உண்ண முடியாத காரணத்தினால் மசித்த உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழத்துடன் சேர்த்து உண்ணலாம். ஆனால் அதனை தினமும் உண்ணக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். மாதம் ஒரு முறை என்றால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

பூண்டு

பூண்டை உண்ணுபவர்கள் என்றால், தினமும் காலையில் முதல் வேளையாக, பச்சை பூண்டு இரண்டு துண்டுகளை உண்ணுங்கள். இல்லையென்றால் வெதுவெதுப்பான நீருடன் அதனை தினமும் விழுங்கவும் செய்யலாம். சென்ற சிகிச்சையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல், பூண்டும் கூட உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

வெதுவெதுப்பான பால்

பால் என்றால் உங்களுக்கு அலர்ஜி இல்லையென்றால், தினமும் இரவில் வெதுவெதுப்பான பாலை ஒரு டம்ளர் குடியுங்கள். அதனுடன் லேசாக மஞ்சளையும் கலந்து கொள்ளுங்கள்.

கற்றாழை

கற்றாழையும் கூட பொதுவாக காணப்படும் செடியே. தடிமனாக மற்றும் நீண்டு விளங்கும் இந்த செடி, கள்ளிச்செடி போன்ற இலைகளை கொண்டிருக்கும். வாசனையில்லாத ஜெல்லை இது அளிக்கும். இந்த ஜெல்லை தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து குடித்தால், அது பல மாயங்களை நிகழ்த்தும். உங்கள் சருமத்திற்கு மட்டுமல்லாது மூட்டு வலிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இது மிகவும் நல்லதாகும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வேம்பு

வேம்பில் விசேஷ காற்று சுத்தரிப்பு குணங்கள் அடங்கியுள்ளது. இது ஃப்ளூ உட்பட காற்று சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். தினமும் 3-4 வேம்பு இலைகளை மென்று தின்றால் இரத்தம் தூய்மையாகும்.

தினமும் பிராணயாமம் செய்யுங்கள்

தினமும் பிராணயாமம் செய்யுங்கள். காலையில் தொடர்ந்து நடை கொடுங்கள் அல்லது ஜாகிங் செய்யுங்கள். இதனால் உங்கள் தொண்டையும் நுரையீரலும் நல்ல நிலையில் இயங்கிடும். உடலும் நன்றாக இருக்கும். சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் சரி மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் வழியாக ஏற்படும் அனைத்து வகையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் சக்தியை உங்கள் உடலுக்கு அளிக்கும்.

வைட்டமின் சி

சிட்ரஸ் பழங்கள், குறிப்பாக வைட்டமின் சி வளமையாக உள்ள நெல்லிக்காய் ஜூஸை குடிக்க வேண்டும். நற்பதமான நெல்லிக்காய் சந்தையில் இன்னும் 3-4 மாதங்களுக்கு கிடைக்காததால், நெல்லிக்காய் ஜூஸை வாங்கி பயன்படுத்தலாம்.

சுகாதாரம்

கடைசியாக, உங்கள் கைகளை தினமும் அடிக்கடி சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு 15-20 நொடிகளுக்கு கழுவுங்கள்; குறிப்பாக உணவருந்தும் முன்பு, கதவின் கைப்பிடி போன்ற மாசுப்படுத்தப்பட்ட மேற்பரப்புகளை தொட்ட பிறகு. அதுவும் பொது இடங்கள் அல்லது பொது போக்குவரத்தில் பயணம் செய்து வீட்டிற்கு வந்த பிறகு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button