சைவக் கேக் – 2 (Vegetarian Cake)

தேவையான பொருட்கள்

சீனி 125g
மா 125g
மாஜரின் (Margarine) 125g
தண்ணீர் 150ml
பேக்கிங் பவுடர் (Baking Power) 1 மே.க.
கட்டிப் பால் (Condensed Milk) 395g
வறுத்த ரவை (Roasted Semolina) 1 மே.க.
முந்திரி பருப்பு (Cashew Nuts) 50g
பிளம்ஸ் (Plums) 50g
வனிலா (Vanilla) 1 மே.க.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, கட்டிப் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும்.

பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.


ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும்.

Leave a Reply