rma points to arthritis pain SECVPF
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதிலே மூட்டு வலி வருவதற்கான காரணம் என்ன?

தற்போது இருக்கும் இந்த நவீன உலகில், 30 வயதை தாண்டினாலே மூட்டு வலி, எலும்பு வீக்கம் போன்றவை ஏற்படுவது இயல்பாகிவிட்டது. குறிப்பாக உணவு முறை பழக்கத்தால் இளம் வயதினர்கள் சிலர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

சத்தான உணவு முறையை பின்பற்றாததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் நீண்ட காலம் வாழ முடியும்.

எலும்பை வலுவாக வைத்து கொள்ள சத்தான உணவுமுறையை பற்றி பார்க்கலாம்.

சத்தான உணவு முறை:

  • முட்டையை தினமும் உணவு முறையில் சேர்த்து கொள்வதால் நன்மைகள் ஏராளம். மஞ்சள் கருவில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றது.

 

  • நட்ஸ் வகைகளான பாதாம் பருப்பு, முந்திரி போன்றவையில் ஒமேகா-3 வகை உள்ளதால் எலும்பு வீக்கத்தை குறைக்கிறது. அது மட்டும் இல்லாமல் நட்ஸில் மறைந்திருக்கும் கார்டிலேஜ் தன்மை புரோட்டீன் தரத்தை உயர்த்துகிறது.

 

 

  • கீரை வகைகள், ப்ராக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆன்டி-ஆக்சிடன்ட் கிடைக்கின்றது. இதனால் எலும்புகள் தேயாமல் இருக்க பாதுகாக்கின்றது.
  • கொழுப்புகள் அதிகமுள்ள மீன் இறைச்சிகளை சாப்பிடும் பொழுது அதில் உள்ள கொழுப்புகள் உடலிற்கு சென்று தசை பிடிப்பு, மூட்டு வலி போன்றவை வராமல் தடுக்கின்றது.

 

  • மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு வலி பிரச்சனைகளை அறவே தடுக்கும் என்பதால் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் அன்றாட சமையலில் சிறிதளவு மஞ்சளை சேர்த்து வருவது மிகவும் நல்லது.

 

  • சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் எலும்பு வலிமை பெரும். இதனால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் மாத்திரம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம்! ஏன் தெரியுமா?

nathan

சின்னத்திரை தொடர்களுக்கு அடிமையாகும் பெண்கள்

nathan

மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி

nathan

நீரழிவுக்காரர்கள் சிறப்பு காலணியை தேர்ந்தெடுங்க

nathan

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

nathan

அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!

nathan

வீக்கமடைந்து இரத்த கசிவை ஏற்படுத்தும் ஈறுகளுக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால், மன அழுத்தம் குறையுமாம்! – ஆய்வில் தகவல்

nathan

இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாம்…

nathan