29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
images35
ஆரோக்கியம் குறிப்புகள்

அசிடிட்டி பிரச்சனையா?

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை உணவை தவிர்க்க வேண்டாம் வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக் கொள்ளவும்.

இனிப்பு அமிலத்தை தூண்டும். அதேபோல், உப்பு, எண்ணெய், ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி, காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள் நல்லது. பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர் நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடவும்.

தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை – இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.
images35

Related posts

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

குண்டாகாமல் எப்பவும் ஒல்லியா ஆரோக்கியமா இருக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்க

nathan

கரப்பான் பூச்சியை விரட்டியடிக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இதை இரண்டு முறை செய்யாவிட்டால் சிக்கல் தான்!

nathan

காரணம் என்ன? வயதான அப்பாக்களின் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்களாம்!

nathan

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க வேண்டுமா? சோறு வடித்த கஞ்சி மட்டும் போதுமே!

nathan

கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது

nathan