34.9 C
Chennai
Sunday, May 11, 2025
d359874d8ec33d02
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான பாம்பே சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் – 8,

உப்பு சேர்த்த வெண்ணெய் – தேவைக்கேற்ப,
பீட்ரூட் – ஒன்று,
உருளைக்கிழங்கு – ஒன்று,
தக்காளி – ஒன்று,
வெங்காயம் – ஒன்று,
வெள்ளரிக்காய் – ஒன்று,
சாட் மசாலாத்தூள் – சிறிதளவு,
டொமேட்டோ கெட்சப், கிரீன் சட்னி – தேவையான அளவு.

செய்முறை:

4 பச்சை மிளகாய், இஞ்சி ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்), புதினா, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னி தயார்.

உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

பீட்ரூட்டையும் இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

பிறகு இரண்டையும் தோலுரித்து ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும்.

வெள்ளரிக்காய், தக்காளியை ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தைத் தோலுரித்து சிறிய வட்டங்களாக நறுக்கவும்.

ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவவும்.

மற்றொரு பிரெட் ஸ்லைஸில் கிரீன் சட்னி தடவவும்.

கிரீன் சட்னி தடவிய பிரெட் ஸ்லைஸை ஒரு தட்டில் வைத்து கிரீன் சட்னியின் மேல் 2 உருளைக்கிழங்கு துண்டுகள், 2 பீட்ரூட் துண்டுகள் வைக்கவும்.

இதன் மேல் சில தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.

காய்கறிகளின் மேல் சிறிதளவு டொமேட்டோ கெட்சப் தெளித்து, சாட் மசாலாத்தூள் தூவி, வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸால் மூடவும்.

மற்ற பிரெட் ஸ்லைஸ்களிலும் இதேபோல் சாண்ட்விச் செய்துகொள்ளவும்.

ஒவ்வொரு சாண்ட்விச்சையும் நான்கு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

சூப்பரான பாம்பே சாண்ட்விச் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

மிளகு பட்டர் துக்கடா

nathan

மீன் கட்லெட்

nathan

மூங்தால் தஹி வடா

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

nathan

ஜெல்லி பர்பி

nathan

அவகாடோ சாண்ட்விச்

nathan

கோதுமை காக்ரா

nathan

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி

nathan