ஆரோக்கியம் குறிப்புகள்

வெண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமானதா?

உணவில் வெண்ணெய் சேர்ப்பது நல்லதா என்று கேட்டால் பலரும் உடனே சொல்வது ‘இல்லை’ என்று தான். ஏனெனில் இதனை உட்கொண்டால், இதில் நிறைந்துள்ள கொழுப்புக்களால் விரைவில் கொழுகொழுவென்று குண்டாகிவிடுவோம் என்பது தான் காரணம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் வெண்ணெயைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.

ஆகவே வெண்ணெய் ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. அதே நேரம் அளவாக எடுத்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெண்ணெயில் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். வெண்ணெயில் லெசிதின் என்னும் பொருள் உள்ளது.

இது கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். இப்படி கொலஸ்ட்ரால் கரைந்தால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இதனை உணவில் அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வெண்ணெய் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பான். எனவே இவற்றை உட்கொள்வதால், அது உடலில் ஏற்பட்டுள்ள சிறு நோய்த்தொற்றுகளை தடுக்கும்.

வெண்ணெய் சாப்பிடுவது, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வழிவகுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
89ef5c3e 8ddb 4e31 845a 9e2f5f0ec2be S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button