முகப் பராமரிப்பு

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

கோவிட் -19 என்னும் பெருந்தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நமது சருமத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவது நல்லது. ஊரடங்கு முடியும் வரை வெளியில் செல்வது தடை விதிக்கப்பட்டிருப்பதால் சன்ஸ்க்ரீன் பயன்பாட்டின் தேவை தற்போது இல்லை. ஆனால் இரவில் சில க்ரீம்களை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.

உங்கள் சருமம் பொலிவாக பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதற்கு இரவு நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன் 15 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினால் போதும். இதனால் உங்கள் சருமம் மிகப்பெரிய பொலிவு பெறும். மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

முகத்தை சுத்தம் செய்வது

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் முகமே அடையாளம். மற்றவர்களை கவர்வதற்கு முகம் ஒரு முக்கிய அம்சமாகும். முகம் ஒரு கண்ணாடி போல். கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு சேர்ந்து கண்ணாடி தனது பொலிவை இழப்பது போல் பலவிதமான அழுக்கு மற்றும் தூசு சேர்ந்து உங்கள் முகத்தை பொலிவிழக்க வைக்கின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் முகத்தை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

* முதலில் சுத்தமான நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள்.

* இரண்டு ஸ்பூன் பச்சை பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையில் ஒரு பஞ்சை நனைத்து உங்கள் முகத்தில் தடவி 2 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

* சுத்தம் செய்யக்கூடிய கூறுகள் பாலில் இயற்கையாகவே அமைந்திருப்பதால் அவை உங்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்கின்றன.

* உங்கள் முகத்தை சுத்தம் செய்யாமல் இருப்பதால் அழுக்குகள் அகற்றப்படாமல் பருக்கள் உங்கள் முகத்தை பாதிக்கும்.

டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைஸ்

பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்த பின்னர், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைஸ் செய்ய 3 நிமிடம் ஒதுங்குங்கள். முகத்தில் உள்ள இயற்கை ஈரப்பதத்தை தக்க வைக்க முகத்திற்கு டோனிங் மற்றும் மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியமாகிறது. பன்னீர் மற்றும் பாதாம் எண்ணெய் பயன்படுத்தி உங்கள் முகத்தை டோனிங் மற்றும் மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ள முடியும்.

கண்களை பொலிவாக்குவது மிகவும் அவசியம்

உங்கள் முகத்திற்கு அதிக கவர்ச்சி மற்றும் அழகைத் தருவது பொலிவான கண்கள். கண்கள் பொலிவிழந்தால் முகம் முழுவதும் சோர்வாக காணப்படும். நாள் முழுவதும் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதால் கண்கள் சோர்வாக நேரலாம். இதனால் மறுநாள் கண் வீக்கம் அல்லது கண் சோர்வு ஏற்படலாம். உடல் சோர்வை போக்க நினைப்பதுபோல், கண் சோர்வையும் போக்குவது நல்லது. ஆகவே உங்கள் 15 நிமிட அழகு சிகிச்சையில் கண்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். இதில் 5 நிமிடங்கள் ஒதுக்கி கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து ஆற்றலை அதிகரிக்கலாம்.

* சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவவும்.

* கண்களில் சில துளி பன்னீர் விட்டு மெல்ல கண்களை மூடி மூடி திறக்கலாம்.

* இதனால் உங்கள் கண்கள் ஆரோக்கியமாகிறது. கண்களின் பிரகாசம் நிர்வகிக்கப்படுகிறது.

கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியம்
கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியம்
கண்களை போலவே அழகான கூந்தலும் உங்கள் அழகை மேம்படுத்த உதவுகிறது. கருமையான, அடர்த்தியான, பளபளப்பான கூந்தல், பொலிவற்ற முகத்தையும் பொலிவாக காட்டும் தன்மை கொண்டது. முதல் கட்டமாக முடி உடையாமல் தடுப்பது மிகவும் அவசியம். மேலும் முடி உதிராமல், நரை முடி தோன்றாமல் தடுப்பது அடுத்த நிலையாகும். ஆகவே தினமும் இரவு 5 நிமிடம் உங்கள் தலை முடி பராமரிப்பிற்கு ஒதுக்க வேண்டும்.

* ஈரமாக இருக்கும் கூந்தலை சீவ வேண்டாம்.

* தலைமுடி காய்ந்தவுடன் மட்டுமே கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும்.

* தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு தினமும் தலைக்கு மசாஜ் செய்யவும்.

* தினமும் தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் கூந்தல் வலிமை அடையும்.

* நாள் முழுவதும் வேலை பார்த்ததால் உண்டான சோர்வு இந்த வகை எண்ணெய் மசாஜ் செய்வதால் நீங்கி விடும். உடலும் புத்துணர்ச்சி பெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button