மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி தொண்டை கரகரப்பு ஏற்படுதா? தொண்டை கரகரப்பு வராமல் தடுப்பது எப்படி?

பெரும்பாலும் தொண்டை கரகரப்பு ஏற்பட காரணமாய் இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது புகை சார்ந்த இடங்களில் வேலை பார்ப்பது, அதிக சத்தமாய் கத்திப் பேசுவது போன்றவையாக தான் இருக்கும். மேலும் தொண்டை கரகரப்புக்கு அழற்சிகளும் காரணமாக இருக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும் போது சில சமயங்களில் சிலருக்கு நெஞ்செரிச்சலும் சேர்ந்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தொண்டை கரகப்பு என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சனை தான். இது ஒரு வாரம் நீடிப்பதே அதிகம். அதற்குள் சரியாகி விடும். ஒரு வேலை உங்களுக்கு தொண்டை கரகரப்பு நெடுநாட்கள் நீடித்து வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும். ஏனெனில், தொண்டை கரகரப்புப் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறி என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாம் முன்பு சொன்னது போல தொண்டை கரகரப்பைப் பல சமயங்களில் நாமே நமக்கு பரிசளித்துக் கொள்ளும் பிரச்சனையாக தான் வருகிறது, சத்தமாக கத்தி பேசுதல், புகைத்தல் போன்றவையின் மூலம். சரி, தொண்டை கரகரப்பு வராமல் தடுப்பது எப்படி என்பதனைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்…

தண்ணீர்

தினமும் ஆறு முதல் எட்டு டம்ளர் வரை தண்ணீர் பருகி வந்தால், தொண்டையில் உராய்வு தன்மை ஏற்படாமல் இருக்கும். உராய்வு தன்மையைக் கட்டுப்படுத்தினாலே தொண்டை கரகரப்பு வராமல் தடுத்துவிடலாம்.

சுவாசிப்பது

பெரும்பாலும் வாய் வழியில் சுவாசிப்பதை தவிர்த்து நாசி வழியாக சுவாசிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் வாய் வழியாக சுவாசிக்கும் போது கிருமிகள் அதிகம் தொண்டைப் பகுதியை கடந்து கல்லீரலுக்கு செல்வதால். இது உங்களுக்கு தொண்டை கரகரப்பை பரிசளிக்க பெருமளவு வாய்ப்புகள் உள்ளன.

மென்மையான உணவுகள்

முடிந்த வரை உங்களது உணவுப் பழக்கத்தில் மென்மையான உணவுகளையும், எளிதாக விழுங்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதும் தொண்டை கரகரப்பு வராமல் தடுக்கும்.

புகைப்பழக்கம்

புகைப்பதன் மூலம் அது நமது தொண்டைப் பகுதியை வறட்சி அடைய செய்கிறது. இதனால், நாம் சாதாரணமாகப் பேசும் போது கூட, தொண்டையில் உராய்வு தன்மை ஏற்படுகிறது. இதனால், சுலபமாக தொண்டை கரகரப்பு ஏற்பட வாய்புகள் உள்ளன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வாய் கொப்பளிப்பது

நாம் உபயோகப்படுத்தும் சில வாய் கொப்பளிப்பு திரவங்களில் இருக்கும் கேடு விளைவிக்கும் இரசாயன கலப்புகள் கூட தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும்.

காரமான உணவுகள்

தொண்டைப் பகுதி மிகவும் மென்மையான பகுதியாகும். எனவே, நாம் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்த்தாலே தொண்டை கரகரப்பு பிரச்சனை வராது பார்த்துக் கொள்ளலாம்

குடிப்பழக்கம்

அதிகம் மது அருந்துதலின் காரணமாகவும் தொண்டை கரகரப்பு பிரச்சனை ஏற்படுவதாக பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிட்ரஸ் ஜூஸ்

அதிகம் டைல்யூட் செய்யப்படாத சிட்ரஸ் ஜூஸ் குடிப்பதன் மூலமாகவும் தொண்டை கரகரப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், அதில் இருக்கும் அசிடிக் தன்மைத் தொண்டைப் பகுதியை எரிச்சல் அடையச் செய்யும். இதனாலும் தொண்டை கரகரப்பு ஏற்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

ஹஸ்கி வாய்ஸ்

பல நேரங்களில் கிசுக்கிசு பேசும் போதும், புரளி பேசும் போது, நாம் ஹஸ்கி வாய்ஸ் உபயோகப்படுத்துவது உண்டு. அப்போது நம் குரல் வளத்தில் ஏற்படும் கடினத் தன்மையின் காரணமாகவும் கூட தொண்டை கரகரப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொண்டை கரகரப்பை போக்க…

பசும்பாலில் மிளகை நன்குப் பொடி செய்து அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்துப் பருகினால் தொண்டை கரகரப்பிலிருந்து விடுபடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button