கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

இளநரையை தவிர்க்க

images (4)* தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.

* பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும். – See more at: http://www.mailofislam.com/koondhal_paramarippu.html#sthash.9ea2Sd93.dpuf

Related posts

பொடுகை விரட்டும் வேப்பிலை நீர் எப்படி தயாரிப்பது?

nathan

இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை

nathan

ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்?

nathan

இத படிங்க! முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் சின்ன வெங்காயம்…! எவ்வாறு உபயோகம் செய்வது?.!!

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

அழகான கூந்தலுக்கு…

nathan

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

​சால்ட் அண்ட் பெப்பர்… ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு!

nathan