ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?

பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் குழந்தையை மனதளவில் எவ்வளவு பாதிக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. நீங்கள் கவனிக்காமல் செய்யும் சில தவறுகள் உங்கள் குழந்தைக்கு வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையை கொடுத்து இரவில் அவர்களை இரகசியமாக அழ செய்யுமாம். அவை என்னவென்று காணலாம்.

1. துக்க செய்திகள்

இப்போது டிவி செய்திகள் சில கொடுரமான விஷயங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றன. இரணுவ சண்டைகள், இறப்பு போன்ற சில விஷயங்களை குழந்தைகள் காண்பதால் அவர்கள் அதிகமாக கவலை அடைந்து, இரவு நேரங்களில் இதை நினைத்து இரகசியமாக அழுகிறார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

2. பெற்றோர்களின் சண்டை

தாய், தந்தை வீட்டில் சண்டையிடுவது எந்த ஒரு குழந்தைக்கும் பிடிக்காது. அது சிறிய விஷயமோ அல்லது பெரிய விஷயமோ மிக சத்தமாக சண்டை போடுவது குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கிறது. ஆனால் அவர்கள் இதை வெளியில் அவர்கள் சொல்வதில்லை. உங்கள் பிரச்சனைகளை இரவு தூங்குவதற்கு முன்பாக முடித்துக்கொள்ளுங்கள். அல்லது குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது பிரச்சனைகளை பற்றி பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். வெளியில் இருக்கும் போது குழந்தைகளின் கவனம் உங்கள் பேச்சில் திரும்பாது.

3.பெற்றோர்களின் விவாகரத்து

தனது பெற்றோர்களின் பிரிவு குழந்தையை பாதிக்காது என நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இது மனதளவில் குழந்தையை அதிகமாக பாதிக்கும். சில குழந்தைகள் இதனை வெளியே சொல்வார்கள். சிலர் இதனை மறைத்துவிடுவார்கள். நீங்கள் விவாகரத்து பெறும் முடிவில் இருந்தால் சற்று உங்கள் குழந்தைகளை பற்றி நினைத்து பாருங்கள். அவர்களது கண்ணீருக்கு காரணமாகிவிடாதீர்கள்.

4. அவமதிக்கும் பெயர்கள்

குழந்தைகளை அவமதிக்கும் பெயர்களை வைத்து அழைக்காதீர்கள். முட்டாள், சோம்பேறி என்பது போன்ற பெயர்களை சொல்லி அழைப்பது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். இதனை நினைத்து அவர்கள் இரவில் இரகசியமாக மனமுடைந்து அழுவார்கள். எனவே இது போன்ற செயல்களால் பிஞ்சு மனதை காயப்படுத்தாதீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button