21 612b1eef2
அழகு குறிப்புகள்

“கம்பு லஸ்ஸி” செய்வது எப்படி?

நம் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவு கம்பு. இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்கும்.

கம்பை தொடர்ந்து உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பட்டு பல நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

இதவை வைத்து சுவையான லஸ்ஸி தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கம்பு மாவு – ஒரு கப்
தயிர் – 3 கப்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – 10 இலைகள்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.

பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

கம்பு மாவை தண்ணீர் விட்டுக் கரைத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறி வேகவிடவும்.

மாவு நன்கு வெந்தபின் இறக்கி ஆறவிடவும்.

பிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறினால் சுவையான லஸ்ஸி தயார்.

Related posts

கொலாஜன் ஃபேஷியல்: collagen facial

nathan

முகத்தில் ஏற்படும் குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்

nathan

உங்கள் கழுத்தை அழகாக பேணிப் பராமரிக்க

nathan

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

sangika

சூப்பர் டிப்ஸ் சரும அழகுக்கு பாதாம்

nathan

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

nathan

கழுத்தில் படரும் கருமை

nathan