ஆரோக்கிய உணவு

வாரத்திற்கு இருமுறை கட்டாயம் ப்ரோக்கோலி சாப்பிடுங்க

தண்ணீர் சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் ப்ரோக்கோலி உடலின் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.

எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இந்த ப்ரோக்கோலி சிறந்த பலனைத்தரும்.

முக்கியமாக ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மேலும் இதில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய நோயிலிருந்து பாதுகாக்கின்றது.

ப்ராக்கோலியில் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.

ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி அது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச விட்டமின் சி மிக முக்கியம் தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button