39.4 C
Chennai
Tuesday, May 28, 2024
face wash
முகப் பராமரிப்பு

முகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

கத்திரிக்காய் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதனை சமையலில் சேர்த்து பயன்படுத்தும்போது சமையலின் சுவை அதிகரிக்கும். ஆனால் கத்திரிக்காய் சுவை பிடிக்காதவர்களும் உண்டு. கத்திரிக்காய் என்பது ஒரு குறைந்த கலோரி காய் ஆகும்.

பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னிடம் கொண்டுள்ள கத்திரிக்காய் சில அழகு சார்ந்த நன்மைகளும் கொண்டுள்ளது என்பதை அறிய சற்று ஆச்சர்யமாக உள்ளது. கத்தரிக்காயை உட்கொள்வதால் அல்லது உடலுக்கு மேற்புறமாக பயன்படுத்துவதால் அழகு மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

கத்தரிக்காய்

உணவின் வரலாற்றைப் பற்றி அறிந்தவர்களில் சிலர், கத்திரிக்காய் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்று கூறுகின்றனர். வேறு சிலர், இது சீனாவைத் தாயகமாகக் கொண்டது என்றும் கூறுகின்றனர்.

பழங்காலத்தில் உயர்தட்டு பெண்கள் கத்திரிக்காயின் ஊதா நிற தோல்பகுதியைக் கொண்டு பல் துலக்கியதாகக் கூறப்படுகிறது. இது போல் பல கதைகளும் உண்டு. ஆனால் கத்திரிக்காய் பயன்படுத்தி இங்கே நான்கு விதமான அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நிச்சயம் சோதித்துப் பார்த்து வெற்றி பெறலாம்.

 

பழுப்பு நிறத் திட்டுக்கள் மறைய

சருமத்தில் சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு நிறத் திட்டுக்கள் தோன்றுகிறது. பெரும்பாலும் தோள்பட்டை மற்றும் முகத்தில் காணப்படும் இந்த பழுப்பு திட்டுக்கள் உடலில் பல்வேறு இடங்களிலும் காணப்படும்.

கத்திரிக்காய் பயன்படுத்துவதால் இந்த பழுப்பு திட்டுக்கள் முற்றிலும் அழிவதில்லை. மாறாக அவை இயற்கையான முறையில் லேசாக்கப்படுகின்றன. தொடர்ந்து பத்து நாட்கள் இதனைப் பயன்படுத்துவதால் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

முதல் நிலை

ஒரு கத்திரிக்காயை எடுத்து வட்ட வடிவத்தில் 1/4 இன்ச் அடர்த்திக்கு நறுக்கிக் கொள்ளவும். காயாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் கத்திரிக்காயைப் பயன்படுத்தவும்.

இரண்டாம் நிலை

நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து திட்டுக்கள் இருக்கும் இடங்களில் சுழல் வடிவத்தில் 3-5 நிமிடங்கள் தடவவும். தாவர ஊட்டச்சத்துகள், வைட்டமின், மினரல் போன்ற சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் கத்திரிக்காயில் அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு சிறந்த நன்மையைத் தருகிறது.

மூன்றாம் நிலை

இந்த கத்திரிக்காய் சாறு உங்கள் முகத்தில் தொடர்ந்து 15 நிமிடங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தொடர்ந்து இதனைச் செய்து வருவதால் சிறு அளவு மாற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். எனவே தொடர்ந்து இதனைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மருக்களுக்கு குட் பை

கத்தரிக்காயைப் பயன்படுத்தி மருக்களைப் போக்குவது என்பது மிகப் பழங்கால நடைமுறையாகும். இதற்கு இரண்டு மூலப்பொருட்கள் தேவை. மருவை மூடும் அளவு கொண்ட மெலிதாக நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் ஒரு பேன்டேஜ்

முதல் நிலை

ஒவ்வொரு இரவும், உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு துண்டு கத்திரிக்காயை எடுத்து மருவில் வைத்து அது விழாமல் தடுக்க ஒரு பேன்டேஜ் போட்டு மூடிக் கொள்ளவும்.

இரண்டாம் நிலை

தொடர்ந்து இப்படி செய்து வருவதால் அந்த மரு எளிதாக விழுந்து விடுவதை நம்மால் காண முடியும். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு துண்டு கத்திரிகாயைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு முறையும் புதிதாக நறுக்கிய கத்திரிகாயைப் பயன்படுத்தவும், இப்படி செய்வதால் அடுத்த இரண்டு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்திற்கு இதமளிக்கும்

எண்ணெய் சருமம் கொண்ட பெண்கள் கத்திரிக்காய் மாஸ்க் பயன்படுத்துவதால் அவர்கள் சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இவற்றைப் பயன்படுத்த பொறுமை மிகவும் அவசியம். மற்ற மாஸ்க் போல், இந்த மாஸ்கும் முகத்தில் தடவியவுடன் அரை மணி நேரம் காத்திருந்து பின்பு அதனைக் கழுவ வேண்டும். இதனால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

முதல் நிலை

ஒரு பெரிய துண்டு கத்திரிக்காயை எடுத்து தோல் நீக்காமல் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதுடன் இரண்டு ஸ்பூன் வாசனையற்ற யோகர்ட் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இரண்டாம் நிலை

இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். இருபது நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கவும் கத்திரிக்காய் பயன்படுகிறது. உங்கள் சருமம் எண்ணெய்த் தன்மை அல்லது வறண்ட தன்மை அலல்து சராசரியாக இருந்தாலும் இதனைப் பயன்படுத்த முடியும். அரைத்த கத்திரிக்காய் விழுதை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நல்ல தீர்வு வரும்வரை இதனைப் பின்பற்றவும்.

 

உங்கள் கூந்தலுக்கு கத்திரிக்காய்

கத்திரிக்காயில் உள்ள என்சைம்கள், கூந்தலின் வேர்க்கால்களை வலிமையாக்கி கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பிசுபிசுப்புத் தன்மை அதிகம் உள்ள கூந்தலுக்கு கத்திரிக்காய் நல்ல தீர்வைத் தருகிறது. கத்திரிக்காயை நறுக்கி உங்கள் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்வும். பின்பு வழக்கம்போல் தலையை அலசவும்.

Related posts

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

உங்களுக்கு தெரியுமா மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க அற்புதமான சில வழிகள்!!!

nathan

முகத்தை ஜொலிக்க வைக்க எளிய முறை!…

nathan

கோடைகால சருமத்தை பாதுகாக்க ஆண்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் போதும்…!

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு முகத்தில் மச்சம் இருக்கிறதா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

nathan

முகத்தில் பருத்தொல்லையா? இதோ எளிய நிவாரணம்….

nathan