30.3 C
Chennai
Sunday, May 19, 2024
11 mangalorean egg c
அசைவ வகைகள்

சுவையான மங்களூர் முட்டை குழம்பு

முட்டைக் குழம்பை பலவாறு சமைக்கலாம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு. இந்த ரெசிபியின் ஸ்பெஷல், இதில் தேங்காய் பால் சேர்த்து செய்வது. மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். அந்த அளவில் இந்த மங்களூர் முட்டை குழம்பானது ஈஸியாகவும் சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த மங்களூர் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mangalorean Egg Curry Recipe
தேவையான பொருட்கள்:

முட்டை – 5-6 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
தேங்காய் பால் – 1/2 கப்
எண்ணெய் – 3 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

ஓமம் – 1 சிட்டிகை
பட்டை – 1
கறிவேப்பிலை – சிறிது
முட்டை – 1 அல்லது 2

மசாலாவிற்கு…

மல்லி – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1 சிட்டிகை
கடுகு – 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 5-6
பூண்டு – 3-4 பற்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கெட்டியான புளிச்சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து, பின் அதில் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வறுத்து, இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 6-7 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேங்காய் கலவையை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றையும் ஊற்றி, தேங்காய் பால் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம், பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு, மிதமான தீயில் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், மங்களூர் முட்டை குழம்பு ரெடி!!!

Related posts

முட்டை சாட்

nathan

சிக்கன் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம்…!

nathan

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

nathan

கொத்தமல்லி சிக்கன் குருமா

nathan

பேபி கார்ன் 65

nathan

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா

nathan

சூப்பரான மட்டன் குடல் குழம்பு

nathan

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan