32.5 C
Chennai
Wednesday, May 29, 2024
21 6131b415
மருத்துவ குறிப்பு

கம்பங்களி செய்வது எப்படி? சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்!!

அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது.

இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

இதிலும் குறிப்பாக ‘Pearl Millet’ என்றழைக்கப்படும் கம்புவில், அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பை உணவில் சேர்க்க வேண்டும், இது வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

இதை வைத்து களி எப்படி செய்வது என பார்க்கலாம்,

தேவையானவை
கம்பு நொய் (கடைகளில் கிடைக்கிறது) – ஒரு கப்
பச்சரிசி நொய் – 3 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
எண்ணெய் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை நறுக்கியது – சிறிது
தயிர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை
குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து கொதி வருகையில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.

பின் கம்பு நொய் மற்றும் பச்சரிசி நொய் சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு அடிக்கடி கிளறி கெட்டியாக வேக விடவும்.

வெந்ததும் இறக்கி ஆறிய பின் பரிமாறவும். முதல் நாள் இரவு கம்பங்களி செய்து அது மூழ்குமாறு தயிர் விட்டு மறுநாள் காலை சாப்பிட, அமிர்தமாக இருக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…மூல நோய் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

nathan

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?

nathan

படுக்கும் முன் செய்யக்கூடாத விஷயங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா கல் உப்பைக் கொண்டு நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவது எப்படி?

nathan

உடம்பு எடையை நீங்க குறைக்கணுமா? இந்தத் தவறுகளை செய்யாதீங்க!!

nathan

உஷாரா இருங்க! சிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறி தெரியுமா?

nathan

பாரசிட்டமால் மருந்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் வரும் ஆபத்து

nathan

சளியை விரட்டும் துளசி

nathan

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan