மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் இயக்கமில்லாத பெண்களும்.. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்…

இந்தியாவில் 54 சதவீத பெண்கள் முழுமையான உடல் இயக்கம் இன்றி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் குறைந்தபட்சம் 376 கலோரிகளையாவது செலவிட வேண்டும். ஆனால் பெரும்பான்மையான பெண்கள் 165 கலோரிகளே செலவிடுகிறார்கள். இது சராசரி கலோரி அளவைவிட 44 சதவீதம் குறைவாகும்.

அதேபோல் ஆண்கள் சராசரியாக தினமும் 476 கலோரிகள் செலவிட வேண்டும். ஆனால் பெரும்பான்மையானவர்கள் 262 கலோரிகளே செலவிடுகிறார்கள். அதேவேளையில் 30 சதவீத ஆண்கள் முழு உடல் இயக்கத்துடன் இயங்குகிறார்கள். 80 சதவீதத்துக்கும் அதிகமாக அளவு கலோரிகளை செலவிட்டுவிடுகிறார்கள். பெண்களில் 24 சதவீதம் பேர்களே முழு உடல் இயக்கம் கொண்டிருக்கிறார்கள். 22 சதவீதம் பேர் மென்மையான உடல் செயல்பாடுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இதுபற்றிய ஆய்வை மேற்கொண்ட அதிகாரி ‘‘ஆண்களும், பெண்களும் 50 சதவீதத்துக்கும் குறைவாக கலோரிகளை செலவிடுவதும், உடல் ரீதியாக செயல்பாடு இல்லாமல் இருப்பதும் கவலைக்குரிய விஷயம். செயலற்ற தன்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் குறைவான அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதனால் உடல் பருமன், கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. 30 வயதை கடந்தவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தினமும் உடல் இயக்கத்தை தூண்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் நோய் பாதிப்புகளை தடுக்க உதவும். இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்’’ என்றார்..

அதிக கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீச்சல், ஜாக்கிங், சைக்கிளிங், கயிறு தாண்டுதல், யோகா, குத்துச் சண்டை போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். நடைப்பயிற்சியும் மிக நல்லது.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button