மருத்துவ குறிப்பு

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள்

“பெண்கள் தங்களது 30வது வயதில் பெருமளவு கருமுட்டைகளை இழந்து விடுகின்றனர்; 40வது வயதில் வெறும் 3 சதவீத கருமுட்டைகளே அவர்களிடம் தங்குகின்றன,” என்று புதிய ஆராய்ச்சி ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள ஆண்ட் ரூஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள், பெண்களிடம் உள்ள கருமுட்டைகள் பற்றி ஓர் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வுக்காக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 325 பெண்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில், 30 வயதிலிருந்து 95 சதவீதப் பெண்கள் அனைவரும் 12 சதவீதமும், 40 வயதுப் பெண் கள் 3 சதவீதமும் கருமுட்டைகளைக் கொண்டிருந்திருக்கின்றனர்.ஒரு பெண் பிறக்கும் போது சராசரியாக மூன்று லட்சம் கருமுட்டைகளோடு பிறக் கிறாள். பெண்கள் பலர், வயதான பின்னும் கருமுட்டைகள் உற்பத்தியாவதால், குழந்தைப் பேற்றுக்குத் தகுதியாக இருப்பதாக தவறாகக் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில், வயதாக ஆக கருமுட்டைகள் குறைந்து கொண்டே வருவதால், குழந்தைப் பேறு என்பது கடினமாகி விடுகிறது என்பது தெரியவந்துள்ளது.மேலும், ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கையில் பெருத்த வித்தியாசம் காணப்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அதன்படி, ஒரு பெண்ணிடம் 20 லட்சம் முட்டைகள் இருந்ததாகவும், இன் னொரு பெண்ணிடம் 35 ஆயிரம் முட்டைகள் மட்டுமே இருந்ததாகவும் ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன.காலத்தைத் தள்ளிப் போடாமல் கருத்தரிப் பதை விரைவுபடுத்தும் படி அந்த ஆய்வு, பெண்களுக்கு அறிவுரை கூறுகிறது. மேலும், யாருக்கு சீக்கிரம் “மாதவிலக்கு’ நின்றுவிடும் என்பதையும், சினைப்பை புற்றுநோய் வரும் என்பதையும் இந்த ஆய்வு கண்டுபிடிக்க உதவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 1442552302 10 doctor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button