28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
25 pimple
முகப் பராமரிப்பு

பெண்களே உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

உங்களுக்கு அடிக்கடி முகப்பருக்கள் வருமா? பொதுவாக நம்மில் பலரும் பருக்கள் கோடைக்காலத்தில் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் குளிர்காலத்திலும் முகப்பருக்கள் வரக்கூடும். முகப்பருக்கள் வர ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முக அழகே பாழாகிவிடும்.

முகப்பருக்கள் வருவதைத் தடுக்க கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. முகப்பருக்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நமது வீட்டுச் சமையலறையிலேயே மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட பொருட்கள் பல உள்ளன. உங்களுக்கு குளிர்காலத்திலும் முகப்பருக்கள் வந்து கடுப்பேற்றினால், அதைக் கட்டுப்படுத்த அந்த பொருட்களால் பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுத்து வந்தாலே போதும்.

 

முக்கியமாக இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது, சருமமும் ஆரோக்கியமாக மற்றும் பொலிவாக இருக்கும். இப்போது குளிர்காலத்திலும் வரும் முகப்பருக்களைப் போக்க உதவும் சில சமையலறைப் பொருட்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் காண்போம்.

மஞ்சள்

மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது குளிர்காலத்தில் வரக்கூடிய முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவும். அதற்கு சிறிது மஞ்சள் தூளை எடுத்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வராமல் இருப்பதோடு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.

தேன்

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு இயற்கை சுவையூட்டி மட்டுமின்றி, சருமத்தை சுத்தம் செய்யும் மற்றும் தீங்கு விளைவிக்கும் சரும பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அற்புத பொருளும் கூட. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் சிறிது தேனை முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் முகத்திற்கு தேனை பயன்படுத்தி வந்தால், முகம் பருக்களின்றி பட்டுப்போன்று மிருதுவாக இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய எலுமிச்சை சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் திறனையும் கொண்டது. அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை தேன் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து முகத்தில் நேரடியாக தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவினால், பரு பிரச்சனை வராமல் இருப்பதுடன், முகமும் பளிச்சென்று காணப்படும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் இருப்பதால், இது பருக்களுடன் தொடர்புடைய வீக்கத்தை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பேக்கிங் சோடாவை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, 30 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால், வீங்கி அசிங்கமாக காணப்படும் பருக்கள் விரைவில் சுருங்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி, ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதம் மற்றும் பிற சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கக்கூடியதும் கூட. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ளன. அதற்கு க்ரீன் டீ தயாரித்த பின், அந்த டீ தூளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

Related posts

உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா?. அப்ப இதோ இதப்படிங்க.

nathan

முட்டைகோஸ் பேஷியல்

nathan

உங்களுக்கு விரைவில் தடிமனான புருவம் கிடைக்க டாப் 7 கைவைத்தியங்கள்!! தூங்கறதுக்கு முன்னாடி இத செய்ங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் பீச் பழ ஃபேஸ் பேக்

nathan

40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

nathan

உங்கள் முகத்தை 15 நிமிடத்திலேயே பளிச்சென்று ஆக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடனே மேக்கப்பை பொருட்களை மாற்ற வேண்டும் என்பதை அறிய உதவும் 7 அறிகுறிகள்!!!

nathan

குளிர் காலத்தில் முகத்தை பராமரிக்க பழங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்!…

sangika