நாட்டு ஆட்டு குருமா

IMG_2528275276877

நாட்டாடு 1 kg

பல்லாரி -2௦௦ grm

தக்காளி நன்கு பழுத்தது -2௦௦ grm

சிவப்பு மிளகாய் – 5 (மிளகாய் தூள் உபயோகிக்கக்கூடாது)

உருளைக்கிழங்கு-2

பச்சை மிளகாய் -2

புதினா மல்லி சிறிதளவு

(வாசத்துக்கு ) கருவேப்பிலை ..

பட்டை -1

கிராம்பு ஏலம் தலா 3

இஞ்சிபூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்

தயிர் -2 ஸ்பூன்

அரைக்க:

குருமாதூள் -2 ஸ்பூன் ..

கசகசா-1 ஸ்பூன் ,

முந்திரிபருப்பு 5

செய்முறை

சட்டியில் எண்ணெய் விட்டு .. பட்டையை போட்டு அதன் பின் கிராம்பு ஏலக்காய் போட்டு நன்கு வாசனை வரும்வரை பொரியவிடவும் வெங்காயம் போட்டு சிவக்கவும் ,தக்காளி கருவேப்பிலை ,பச்சை மிளகாய் போட்டு அதன் பின் இஞ்சிபூண்டு அரைத்த மிளகாய் விழுது ,தயிர் விட்டு தாளிக்கவும்.. அதில் கறியைக்கொட்டி, உப்பு சேர்த்து கிளறவும் .. சிறிதுநேரம் மூடி தம்மில் வைத்து வாசம் வரும் வந்ததும் குருமாதூள் ,கசகசா , முந்திரிபருப்பு அரைத்ததை சேர்த்து இறைச்சியின் அளவுக்கே தண்ணீர்விட்டு கொதிக்க விடவும் நன்கு கொதிக்கவும் மூடியை திறந்து உ.கிழங்கு புதினா மல்லி சேர்த்து தம்மில் வைத்து.. கறி வெந்ததும் பரிமாறவும்..

Leave a Reply