33.4 C
Chennai
Sunday, May 11, 2025
paneer green peas kurma SECVPF
சைவம்

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 250 கிராம்

வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/2 கப்
முந்திரி – 8
கசகசா – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 5

செய்முறை:

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!

Related posts

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்

nathan

கதம்ப சாதம்

nathan

சத்தான வெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

ருசியான சாமை சாம்பார் சாதம்

nathan

காராமணி சாதம்

nathan

சுவையான சத்தான காளான் மிளகு வறுவல்

nathan