அழகு குறிப்புகள்

பெண்களே ஸ்லிம்மான தொடையழகு எதிர்ப்பாக்குரீங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடலை நளினமாக வைத்துக் கொள்ள தான் விரும்புவார்கள். நளினமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, முதல் பிரச்சனையாக இருப்பது தொப்பையும், தொடைப் பகுதி சதையும் தான். தொப்பையைக் குறைக்க பல வழிமுறைகளை கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இந்த தொடை பகுதி சதையை எப்படி குறைப்பது என பலருக்கு தெரியாது. பொதுவாக உடற்பயிற்சியில் இருந்து உணவு பழக்கம் வரை, நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தனி தனி முறையை கையாள வேண்டும்.

 

வாக்கிங் மட்டுமே செய்வதனால் உங்களது உடல் எடையை அதிக அளவில் குறைத்துவிட இயலாது. நீங்கள் வீட்டில் இருந்த படியே சில எளிமையான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றினால், உங்கள் தொடை பகுதி சதையினை குறைப்பது விரைவில் சாத்தியமாகும். இப்போது உள்ள இளைஞர்கள் தங்களது உடலை அர்னால்ட் அளவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை எனினும், கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். சரி இனி உங்களது தொடை பகுதி சதையை எளிதாக குறைக்க நீங்கள் செய்ய வேண்டியவைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

 

கார்டியோ பயிற்சிகள்

முதலில் உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பது அவசியம். எனவே, நீங்கள் அதற்கு கார்டியோ உடற்பயிற்சிகளை பின்பற்றுங்கள். இது உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் உங்களது இதயத்தின் நலத்தை காக்கவும் உதவும். மற்றும் நீங்கள் சைக்கிளிங், ஸ்கிப்பிங் செய்வதினாலும் உங்கள் தொடை பகுதி சதையை எளிதாக குறைக்கலாம்.

ஏறி, இறங்குங்கள்

நீங்கள் உங்களது தொடை பகுதி சதையை குறைக்க ஜிம்மிற்கு கூட போக அவசியம் இல்லை. உங்களது வீட்டில் இருக்கும் மாடி படுக்கட்டுகளை தினமும் ஏறி இறங்கி பயிற்சி செய்யுங்கள் அதுவே, உங்களது தொடை பகுதி சதையை பெருமளவு குறைக்க உதவும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள்

ஸ்ட்ரெட்சிங் பயிற்சி உங்களது தொடை பகுதி சதையைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நீங்கள் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்து வந்தால் ஒரு மாதத்திற்குள் ஒரு சிறந்த மாற்றத்தைக் காண இயலும்.

உணவை தவிர்க்க வேண்டாம்

உடல் எடை குறைக்கிறேன் என்று, உங்களது உணவு அளவை மிகவும் குறைத்துவிட வேண்டாம். முடிந்த அளவு இனிப்பு உணவுகளையும், சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

தின்பண்டங்களை குறைத்து கொள்ளுங்கள்

பெரும்பாலானவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க காரணமே தின்பண்டங்களை அதிகம் உட்கொள்வதன் காரனமாய் தான். எனவே, தின்பண்டங்களை தவிர்த்திடுவது நல்லது. இது, உங்கள் உடலில் தேவையின்றி அதிகரிக்கும் கொழுப்பை குறைக்க உதவும்.

தண்ணீர் பருகுங்கள்

முடிந்த வரை நிறைய தண்ணீர் பருகுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை நீராவது பருகுங்கள். இது உங்கள் உடலில் உள்ள கலோரிகளை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.

நல்ல தூக்கம்

ஓர் ஆராய்ச்சியில் நன்கு உறக்கம் கொள்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என கண்டறிந்துள்ளனர். தூக்கமின்மை உள்ளவர்களுக்கே அதிகம் உடல் எடை கூடுகிறது.

மரபணு பரிசோதனை

சிலருக்கு மரபணு காரணத்தினாலும், தொடை பகுதியில் சதை அதிகம் கூடலாம். சில பெண்களுக்கு அவர்களது பாட்டி, அம்மாவை போலவே தொடை பகுதியில் சதை அதிகம் கூடும். இதை மரபணு காரணம் என்கின்றனர். எனவே நீங்கள் மரபணு பரிசோதனை செய்து. அதற்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொண்டால் தொடை பகுதியில் உள்ள சதையை குறைக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button