ஏன் ம‌ருதாணி கூந்தலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது?

imagesமருதாணி சாம்பல் நிற முடிக்கு மட்டும் பயன்படுவதில்லை. இதை உபயோகப்படுதுவதால் நம் முடி அடர்த்தியாகவும், வலிமையாகவும், அழகாகவும் மாறுகிறது. மருதாணி பேக் உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை என்று பார்ப்போம்.

மருதாணி இந்தியா மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் வளரும் மிகவும் குளிர்ச்சி தரும் அழகு மூலிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முதுமை தோற்றத்தை கட்டுப்படுத்தி, நம் முடி பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் அழகானதாகவும்(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்)மாற்றுகிறது. இந்த பச்சை மூலிகையின் சக்தி கைகளை அலங்கரிக்க மற்றும் நம் முடியின் செம்பட்டை நிறத்தை மறைப்பதற்கு மட்டும் பயன்படவில்லை. இதை தலைக்கு உபயோகப்படுத்துவதால் தேவையற்ற நம் மன அழுத்தத்தை போக்குவதோடு, நம்மை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ஆரோக்கியமான முடி
மாதம் இரண்டு முறை மருதாணியை முடிக்கு தடவினால், நம் முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மற்றும் அடர்த்தியாகவும் மாறுகிறது. மேலும் இது உங்கள் முடியை சுகாதாரமற்ற நிலையில் இருந்து மீட்டு கொண்டு வரவும் உதவுகிறது. மருதாணி உங்கள் முடியின் இயற்கை சமநிலையை பாதிக்கும் கார அமிலங்கள் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறது. நெல்லிக்காய் ஊறவைத்த‌ நீரில் மருதாணியை கலந்து முடிக்கும், வேர்க்காலுக்கும் உபயோகிப்பதால் நல்ல பலனை பெறலாம்.
முடிக்கான ஒரு நல்ல கண்டிஷனர் மருதாணிimages
மருதாணி உங்கள் முடிக்கு ஒரு நல்ல கண்டிஷனர் ஆக உள்ளது. இது ஒவ்வொரு முடி உடையாமல் இருக்கவும், ஒவ்வொரு இழைகளை மென்மையாகவும், முடியின் ஒவ்வொரு அடுக்கையும் பாதுகாப்பாகவும் வைக்கிறது. மருதாணியை தினமும் பயன்பாடுத்துவதால் முடியின் அத்தியாவசிய ஈரப்பதம் பாதுகாகப்படுவதோடு, அடர்த்தியாகவும், வலிமையாகவும் ஆக்குகிறது. இந்த மூலிகை கூந்தல் பேக் உங்கள் முடியை இயற்கையான பிரகாசமாகவும் மற்றும் பளபளப்பானதாகவும், பல மடங்கு வலுவானதாகவும் செய்கிறது.
செம்பட்டையை மறைக்கிறது:
நீங்கள் உங்கள் முடி பாதிப்படையாமல் தலைக்கு சாயம் அடிக்க வேண்டும் என்றால், இரசாயன சாயங்கள் தவிர்த்து மருதாணியை உபயோகிப்பது மிகவும் நன்று. எனவே உங்கள் சரியான பதில் இரசாயன சாயத்திற்கு பதில் மருதாணியே. இதை உபயோகிப்பதால் சேதமடைந்த மற்றும் மந்தமான முடியில் இருந்து பாதுகாப்பதோடு,  நம் முடியின் ஈரப்பதத்தையும் காத்து அமினோ அமிலம் அல்லது மற்ற வேதிப்பொருட்களால் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்கிறது. சிறிதளவு நீரில் உலர்ந்த நெல்லிக்காய் பொடியை இரண்டு தேக்கரண்டி, கருப்பு தேநீர் ஒரு தேக்கரண்டி மற்றும் இரண்டு கிராம்பு போட்டு நீரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை வடித்துக் கொண்டு, இந்த தண்ணீருடன் மருதாணி பவுடரை சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளாவும். ஒரு இரவு முழுவதும் அல்லது குறைந்தது இரண்டு மணி நேரம் தலைக்கு தடவவும்

Leave a Reply