ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கொழுகொழுன்னு இருக்க பொண்ண கட்டிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாமாமே…

குண்டா இருந்தா யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க… காமெடி பீஸா தான் பார்பாங்க… குண்டாக இருந்தாலே அவர்களை கேலி, கிண்டல் செய்ய வேண்டும் என்பது நமது சமூகத்தில் மாற்றப்படாத விதியாக இருக்கிறது.

இதனாலேயே, ஹீரோ கெத்தாக தெரிய வேண்டும் என்றால்.. உடனே அருகில் குண்டாக ஒரு நடிகரை காமெடிக்காக நிற்க வைத்துவிடுவார்கள். சந்திரபாபு, நாகேஷ், ஓமக்குச்சி நரசிம்மன், சந்தானம், சூரி, ஆரம்பக் கால கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டவர்களை தவிர மற்ற பெரும்பாலான காமெடி நடிகர்கள் குண்டாக தான் இருந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு எவ்வளவு எடை கூடினாலும் ஏற்றுக் கொள்ளும் நமது சமூகம்., திருமணத்திற்கு முன்னர் கொஞ்சம் உடல் பருமனாக இருந்தாலும் கூட அய்யய்யோ, அம்மம்மா… அச்சச்சோ.. என்று கூப்பாடு இடும். உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் தான்.

அதற்காக கொஞ்சம் கொழுகொழுவென்று இருந்தாலும் கூட அவர்களை ஏதோ திருமணம் செய்துக் கொள்ள தகுதியற்றவர்கள் போல ஒதுக்குவது எல்லாம் தவறு.

ஆய்வறிக்கை!

இதற்கெல்லாம் ஒரு சரியான பதில் கொடுத்துள்ளது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று. உண்மையில் கொழுகொழுவென்று இருக்கும் வாழ்க்கை துணை தான் இல்லறத்தை நிம்மதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நகர்த்துகிறார்கள் என்று கூறியுள்ளது அந்த ஆய்வறிக்கை.

மெக்ஸிகோ ஆய்வு!

மெக்ஸிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி துறையின் சார்பாக மருத்துவர் எட்கார்டோ மற்றும் மருத்துவர் பைல்மன் நடத்திய ஆய்வில், ஒல்லியான பெண்களுடன் ஒப்பிடுகையில் கொழுகொழுவென்ற பெண்களுடனான உறவில் ஆண்கள் பத்து மடங்கு அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

புன்னகை!

மேலும், இந்த ஆய்வில் கலந்துக் கொண்ட ஆண்களின் கருத்துப்படி காண்கையில்… கொழுகொழுவென்ற துணை கொண்டுள்ள ஆண்கள் நாளொன்றுக்கு அதிகமாக புன்னகைத்து மகிழ்கிறார்கள் என்ற தகவலும். இந்த புன்னகைகள் தங்கள் வாழ்வில், உறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கின்றன என்றும் கூறியுள்ளனர்.

திருப்தி!

என்னதான் கூடுதலான எடை ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று கூறினாலும் கூட… இதன் காரணத்தால் பக்கவிளைவுகள் உண்டானாலும்.. அவர்கள் தங்கள் துணையை முழுவதுமாக திருப்திப்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆண்கள் ஒல்லியான பெண்களை காட்டிலும் கொஞ்சம் கொழுகொழுவென்று இருக்கும் பெண்கள் மீதுதான் அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு மூலம் அறியவந்துள்ளது.

பிரச்சனை இல்லை!

பொதுவாகவே பெண்கள் கூடுதல் எடையாக இருந்தால் பிரசவம் கொஞ்சம் சிரமம் எனப்படும். ஆனால், இந்த ஆய்வில்… அளவுக்கு அதிகமாக மிகையாக இருந்தால் மட்டுமே சிரமங்கள் வருமே தவிர, கொழுகொழுவென்ற உடல் அமைப்புடன் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை, பிரசவத்தின் போது தாங்கள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரஷர் குறைவு…

ஒல்லியான பெண்களுடன் ஒப்பிடுகையில்.. கொஞ்சம் கொழுகொழுவென்று இருக்கும் பெண்கள்.. தங்கள் துணை மீது அதிக பிரஷர் போடுவதில்லை என்றும். துணையால் ஏற்படும் மன அழுத்தமானது குறைவாக இருக்கிறது என்றும். முக்கியமாக இவர்கள் தங்கள் துணையை சிக்ஸ்-பேக் உடற்கட்டு வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

நன்கு சமைக்கிறார்கள்…

கொழுகொழுவென்று இருக்கும் துணை சமையலில் கெட்டிக்காரராக இருக்கிறார்கள். அவர்கள் ருசியாக சமைத்து அசத்துகிறார்கள். சாக்லேட் சாப்பிடுவதில் மட்டுமின்றி, சாக்லேட் போல இனிமையாக பழகவும் செய்கிறார்கள் என்று ஆய்வில் கலந்துக் கொண்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கட்டிப்பிடி வைத்தியம்!

கொழுகொழுவென்று இருக்கும் பெண்களானவர்கள் கட்டிப் பிடிப்பதில் வல்லவர்கள். எந்த ஒரு காரணமும், எதிர்பார்ப்பும் இன்றி இவர்கள் துணையை கட்டிப்பிடித்து மகிழ்வார்கள். மேலும், இவர்கள் மத்தியில் நகைச்சுவை உணர்வு அதிகம் வெளிப்படும். இதனால், இல்வாழ்க்கையில் சிரிப்பு சத்தத்திற்கு பஞ்சமே இருக்காது என்றும் பலர் கருத்து கூறியுள்ளனர்.

ஊடகங்களில் மட்டுமே…

கொழுகொழுவென்று இருப்பது குறை, ஆரோக்கியமின்மை என்று சினிமா, விளம்பர ஊடகங்களில் மட்டுமே கூறுகிறார்கள். இந்த ஊடகங்கள் தான் கொஞ்சம் கொழுகொழுவென்று இருப்பதையும் மிகவும் உடல் பருமன் போல எடுத்துக்காட்டி தவறான பிம்பத்தை உருவாக்குகிறது.

ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காக மிகவும் ஒல்லியாகவும் இருத்தல் கூடாது. கொழுகொழு பெண்கள் தான் ஆண்கள் தங்கள் துணை தேடுகளில் பெஸ்ட் சாய்ஸாக காண்கிறார்கள் என்று இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button