mangalore ponda sweet
சிற்றுண்டி வகைகள்

சுவையான மங்களூர் போண்டா சாப்பிடனுமா? வீட்டிலேயே செய்யலாம்!

கர்நாடகத்தில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்ற ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலமானது. இங்கு அவற்றில் இனிப்பான மங்களூர் போண்டாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப் சர்க்கரை – 1/2 கப் தயிர் – 1 1/2 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி!!!

Related posts

சூப்பரான அரிசி பொரி உப்புமா

nathan

உழுந்து வடை

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

nathan

மனோஹரம்

nathan

முந்திரி வடை

nathan

ஆப்பிள் பஜ்ஜி

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan