அழகு குறிப்புகள்

வெளியான பட்டியல் ! உலகிலே சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு இது தான்!

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து ஐக்கிய அரபு அமீரகம் அசத்தியுள்ளது.

உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால், அதற்கு பல வழிகள் உண்டு, இருப்பினும் விமானத்தில் பறந்து ஒவ்வொரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசையாக உள்ளது.

ஆனால், அதற்கு கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) மிகவும் முக்கியம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் கடவுச்சீட்டு தேவை, அது தான் உங்களை அந்த நாட்டிற்குள் நுழைய வைக்கும் ஒரு நுழைவுச் சீட்டு என்று கூட கூறலாம்.

அந்த வகையில், தற்போது Arton Capital வெளியிட்டுள்ள உலகளாவிய பாஸ்போர்ட் பட்டியலில், அதிக மதிப்பெண் பெற்று, உலக அளவில் முதல் இடத்தை ஐக்கிய அரபு அமீரகம பிடித்துள்ளது.

 

ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்கு சில சலுகைகளுடன் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 98 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 54 நாடுகளுக்கு அங்கு சென்ற பின் விசா கொடுப்பதும், 46 நாடுகளுக்கு நுழைவதற்கு முன்பு விசா என்ற வசதியும் உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் முதல் இடத்தை பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், அதன் பின் கடந்த 2020-ஆம் ஆண்டு 14-வது இடத்திற்கு சரிந்தது. தற்போது மீண்டும் ஒரு வலிமையான கடவுச்சீட்டு கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து நாட்டின் கடவுச்சீட்டு உள்ளது. நியூசிலாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், 146 நாடுகளுக்கு செல்ல முடியும்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதே போன்று ஜேர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 144 நாடுகளுக்கு செல்ல முடியும்.

அதே சமயம் இதில் விசா விதிமுறைகள் எப்படி தற்போது உள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில், இஸ்ரேலின் பாஸ்போர்ட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக அதிசக்தி வாய்ந்ததாக உள்ளது.

உலக அளவில் 17-வது இடத்தை பிடித்துள்ள இஸ்ரேல் கடவுச்சீட்டு, 89 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு மற்றும் 37 நாடுகளில் இறங்கிய பின்பு விசா, 72 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன் விசா என்ற வாய்ப்பை கொடுக்கிறது.

இதே போன்று உலகிலே மிகவும் வலிமை குறைந்த கடவுச்சீட்டாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஈராக், சிரியா, பாகிஸ்தான், சோமாலியா, ஏமன், மியான்மர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button