rajma sundal
ஆரோக்கிய உணவு

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

தேவையான பொருட்கள் :

சிவப்பு ராஜ்மா – ஒரு கப்

பெருங்காயத்தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2

செய்முறை :

ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Related posts

அடேங்கப்பா மாதுளம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா..?

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் மனநிலையை மேம்படுத்தும் 10 அற்புதமான உணவுகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் 25 ஆரோக்கிய உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் உணவில் முட்டை சேர்த்து கொள்வது ஆபத்தா?

nathan

இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்

nathan

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

பாரம்பரிய உணவுகள் நமக்குப் பகைவன் அல்ல!

nathan

முட்டை தொக்கு மசாலா – செய்வது எப்படி?

nathan

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan