33.4 C
Chennai
Sunday, May 11, 2025
5a86625a89f878b4c9c
Other News

அஜீரணத்தை எளிதில் குணப்படுத்த இதோ சில கைவைத்தியங்கள் ..!!

மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் மற்றும் நகரமயமாக்குதல் ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தத்தின் அளவுகள் சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், மக்களிடையே இன்று அஜீரணம் என்பது மிக பொதுவான ஒரு நிலையாகிவிட்டது.

அஜீரண பிரச்சனை ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, கடுமையான வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்றவற்றையும் சந்திப்பார்கள்.

அவற்றில் இருந்து விடுபட வேண்டுமாயின் ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.

குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம்.

இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் உதவும். பெருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது நீருடன் கலந்து சாப்பிடலாம்.

சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும்.

திராட்சைபழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும்.

கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு தொந்தரவை நீங்கிவிடும்.

Related posts

இன்று ரூ.14,000 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் -சகோதரரிடம் கடன் வாங்கிய ரூ.5,000…

nathan

கள்ளக்காதல்… கைவிட மறுத்து நள்ளிரவில் மருமகன்

nathan

நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.!வாழ்த்திய குஷ்பூ மற்றும் மீனா.!

nathan

மேலாடை நழுவுவது கூட தெரியாமல்.. ஆட்டம் போடும் சமந்தா..!

nathan

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆச படாதீங்க.! பயில்வான் விமர்சனம்.!

nathan

80 கோடி லாட்டரி; 20 வயது இளைஞர் செய்த வியப்பான செயல்!

nathan

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

nathan

சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

nathan

நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள்

nathan