30.5 C
Chennai
Monday, May 27, 2024
thinhair
ஆரோக்கிய உணவு

உங்க முடி எலிவால் போன்று உள்ளதா? சில அற்புத வழிகள்!

தற்போது பலருக்கு தலைமுடியானது ஒல்லியாக காணப்படுகிறது. ஆண்களை எடுத்துக் கொண்டால், அவர்களது தலையில் முடியானது அடர்த்தியின்றி ஆங்காங்கு வழுக்கையாக தெரியும். பெண்களுக்கோ முடி எலிவால் போன்று காணப்படும். இப்படி தலைமுடி அடர்த்தியின்றி காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை முதுமை, மரபணுக்கள், மோசமான ஊட்டச்சத்து, அதிகமான தலைமுடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, கெமிக்கல் பொருட்களின் எதிர்வினைகள், உடல்நல பிரச்சனைகள் போன்றவை.

காரணம் என்னவாக இருந்தாலும், அன்றாடம் தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வருவதன் மூலம், முடியை இயற்கையாகவே அடர்த்தியாக்க வாய்ப்புள்ளது. கீழே மெலிந்து எலிவால் போன்று காட்சியளிக்கும் முடியை அடர்த்தியாக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மெலிந்துள்ள முடியை அடர்த்தியாக்கலாம். ஆனால் இந்த வழிகளால் பெறும் பலன்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இது வலுவான உடலுக்கும், அடர்த்தியான தலைமுடியை உருவாக்கவும் மிகவும் அவசியமானது. முட்டையை தவறாமல் தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, அது தலைமுடியை வலுவாக்கவும், அடர்த்தியாக்கவும் தேவையான சத்தை வழங்கும்.

அதற்கு ஒரு முட்டையை உடைத்து நன்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் தலைமுடியை நீரில் நனைத்து, ஈரமான முடி மற்றும் தலைச்சருமத்தில் படும்படி நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இல்லாவிட்டால், ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை தலைச்சருமம் மற்றும் தலைமுடியில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி இவற்றில் ஏதேனும் ஒரு வழியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரடு முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி வலிமையாவதோடு, அடர்த்தியாகவும் இருக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் தலைமுடியின் ஆரோக்கியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. ஆலிவ் ஆயிலை தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவினால், அது முடியின் அடர்த்தியை ஊக்குவிக்கும். மேலும் ஆலிவ் ஆயில் தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளவும், தலைச்சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கவும் செய்யும்.

அதற்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைச்சருமம் மற்றும் முடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

ஊட்டச்சத்துள்ள உணவு

ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்க வேண்டும். இவை தலைமுடிக்கு ஊட்டமளித்து, தலைமுடியை நன்கு அடர்த்தியாக வளரச் செய்யும். சொல்லப்போனால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருந்தாலும், தலைமுடி ஒல்லியாகும். ஆகவே இதிலிருந்து விடுபட சால்மன், முட்டை, வால்நட்ஸ், பாதாம், யோகர்ட், பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, பெக்டின் மற்றும் அமிலம் ஒருவரது தலைமுடிக்கு பல வழிகளில் உதவுகிறது. வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை மேம்படுத்தி, தலைமுடியை அடர்த்தியாக்கும். இந்த பழத்தில் உள்ள அமிலம், தலைமுடி பராமரிப்பு பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை தடுத்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும்.

அதற்கு ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம் அல்லது அதன் சாற்றினை தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலசலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சருமம், தலைச்சருமம் மற்றும் முடிக்கு பெரிதும் நன்மை விளைவிக்கும் அற்புதமான மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பொருள். கற்றாழை ஜெல்லை நேரடியாக தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, அலசி வந்தால், தலைமுடி வலுவாவதோடு, விரைவில் அடர்த்தியாகும். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலையும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்றினால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது மற்றும் இது ஒரு நல்ல மாய்ஸ்சுரைசரும் கூட. அதற்கு ஒரு அவகேடோ பழத்தில் உள்ள கூழ் பகுதியுடன் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் தலைச்சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி அவகேடோ பழத்தை வாரத்திற்கு 2 முறை தலைக்கு பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஈ தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான முக்கியமான சத்தாகும். விளக்கெண்ணெயை எந்த ஒரு பொருளுடனும் சேர்த்து பயன்படுத்த தேவையில்லை. வெறுமனே விளக்கெண்ணெயை எடுத்து தலைச்சருமம் மற்றும் தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசினால் போதுமானது.

Related posts

பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

nathan

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் தெரிஞ்சிக்கங்க…

nathan

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

nathan

இதை கட்டாயம் படியுங்கள் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள்!

nathan

பச்சை மாங்காய் ஒரு துண்டு மதிய வேளையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடைகாலத்தில் உடல் சூட்டைத் தணிக்க சூப்பர் டிப்ஸ்..!!!

nathan

இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு! பிஸ்தாவின் மருத்துவ பலன்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை சாதம்

nathan