ஆரோக்கிய உணவு

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும்.
அந்த வகையில் வெள்ளைபடுதல், மலச்சிக்கல், மாதவிடயாயின் போது ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பெண்களின் தசைகள் இறுக்கமாக எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொடுக்கவல்ல “எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது” பற்றிய குறிப்பு

தேவையான பொருட்கள்:
*எள்ளு- 150-200g எள்ளு (Sesame Seeds)
*ஒரு முழுத் தேங்காயின் துருவிய தேங்காய்ப் பூ. (Coconut Powder)
*வெல்லக் கட்டி & சர்க்கரை: (Jaggery Cube)
*சிறிதளவு சர்க்கரை (Sugar)

இனி எள்ளு உருண்டை எப்படிச் செய்வது- செய்முறை!

*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.

*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.

*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).

*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.

*இரண்டு மணி பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார்.

*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.

இது தான் எள்ளு உருண்டை செய்வதற்கான ரெசிப்பி
f101

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button