சிற்றுண்டி வகைகள்

சுவையான சுண்டல் கிரேவி

பலருக்கு சுண்டல் குழம்பு/கிரேவி என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் அதனை எப்படி செய்வதென்று தெரியாது. குறிப்பாக பேச்சுலர்களாக இருப்பவர்கள் மிகவும் ஈஸியான, அதே சமயம் வீட்டில் அம்மா செய்யும் சில ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புவார்கள். அப்படி அம்மா சமைக்கும் சமையலில் சுவையாக இருப்பதில் ஒன்று தான் சுண்டல் கிரேவி.

இந்த சுண்டல் கிரேவியை மிகவும் சிம்பிளாக எப்படி செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Black Channa Gravy
தேவையான பொருட்கள்:

கருப்பு சுண்டல் – 1 கப்
கிராம்பு – 1
பட்டை – 1/2 இன்ச்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 1/2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1/2

அரைப்பதற்கு…

தக்காளி – 1
துருவிய தேங்காய் – 1/2 கப்

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுண்டலை போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 9-10 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள சுண்டல், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், சுண்டல் கிரேவி ரெடி!!!

Related posts

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan

மினி பொடி இட்லி செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan