சமையல் குறிப்புகள்

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான காய்கறி தான் உருளைக்கிழங்கு. ஏதேனும் பண்டிகை என்றால் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் உருளைக்கிழங்கை கொண்டு ஒரு ரெசிபியாவது செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்து போர் அடித்திருந்தால், அதனைக் கொண்டு பொடிமாஸ் செய்து சுவைத்துப் பாருங்கள்.

இங்கு உருளைக்கிழங்கு பொடிமாஸை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Potato Podimas Recipe
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை வாணலியில் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு 2-3 நிமிடம் நன்கு வதக்கி, தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவினால், உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி!!!

Related posts

சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி

nathan

இனியெல்லாம் ருசியே! – 4

nathan

சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி

nathan