Other News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மூன்று சகோதரர்களா?நம்ப முடியலையே..

பல பேர் தமிழ் சின்ன திரைகளில் இருந்து வெள்ளித் திரைகளுக்கு வந்தவர்கள் இருக்கின்றனர் . சன் டிவியின் அசத்தப்போவது யாரு  தொகுப்பாளராக பணியாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார், இப்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகை. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2010 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படமான “நீதானா அவன்” மூலம் அறிமுகமானார். அதன் பின்னர், அவர் பல திரைப்படங்களில் தோன்றினார். ஆனால் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படம்.

ஐஸ்வர்யாவுக்கு ராஜேஷ் பற்றி நிறைய விஷயங்கள் அறிந்திருந்தாலும், அவருக்கு  உடன்பிறப்பு இருப்பதாக பலருக்கு தெரியாது. அவரும் ஒரு பிரபல நடிகர். அது வேறு யாருமல்ல சீரியல் நடிகர் மணிகண்டன். சன் மற்றும் விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களில் தோன்றியுள்ளார்.வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில்  நடித்தார்

ஆனால் அவரைத் தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள்.  இது குறித்து ஒரு நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா ரைஷே, எனக்கு பன்னிரண்டு வயதில் என் சகோதரர் இறந்துவிட்டார் என்று கூறினார். அவன் பெயர் ராக வேந்திரா. அவர் ஒரு பெண்ணை காதலித்தார். எனவே, அவரது மரணம் தற்கொலை தானா என்பது முற்றிலும் தெளிவாக இல்லை.

இதேபோல், என் அடுத்த சகோதரர் மேனேஜ்மென்ட்படித்து முடித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னரே தனது குடும்பத்தை காப்பாற்ற ஒருவரின் சம்பளம் வந்ததால் என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இருப்பினும், அவர் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதன் பிறகு, நான் 11 ஆம் வகுப்பில் இருந்தபோது எனக்கு வேலை கிடைத்தது. பெசன்ட் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில், ரோட்டில் வருபவர்களிடம் ‘மேடம் இந்த சாஸை டேஸ்ட் பண்ணிப் பாருங்க’, ‘ சார் இதைச் சாப்பிட்டிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க’னு மார்க்கெட்டிங் செய்கிற வேலை அது.

அந்த வேலைக்கு ஒரு நாளைக்கு 225 ரூபாய் கொடுத்தாங்க பிறகு, பர்த்டே பார்ட்டி மாதிரி நிறைய ஈவென்ட்ஸ் ஹோஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். இதன் விளைவாக, 500 மற்றும் 1,000 சம்பளம் வரும். அப்படி நான் ஒரு மாதத்திற்கு 5,000 ரூபாய் சம்பாதித்தேன்.அதன் பின்னர் கலக்க போவது யாரு, மானாட மயிலாட  போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இந்த நிலைமைக்கு வந்து உள்ளாராம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

nathan

சுவிஸ் வங்கியில்பணம் பதுக்கிய 83 இலங்கையர்களது விபரங்கள் அம்பலம்?

nathan

சாதாரண காய்ச்சலை கொரோனா என நினைத்து தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு

nathan