சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! மாதுளை தோலை தூக்கி குப்பையில் வீசிடாதீங்க!

மாதுளம் பழம்  ஒரு அற்புதமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கோடிக்கணக்கில் கொண்டுள்ளது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒன்று தான்.

ஆனால் மாதுளம்பழத்தில் இருப்பதை போல சிகப்பு தோலிலும் நன்மைகள் உண்டு.

அது தெரியாமல் தூக்கி எறிகிறோம். மாதுளம் பழத்தோல் அழகினை மெருகூட்ட எப்படி பயன்படுகின்றது என்று பார்க்கலாம்.

 

மாதுளம் பழத்தோலை ஸ்க்ரப் வடிவத்தில் பயன்படுத்தும்போது இறந்த செல்களையும், கரும்புள்ளி மற்றும் வெண் புள்ளிகளையும் உங்கள் முகத்திலிருந்து நீக்க உதவுகிறது.

இதை எப்படிப் பயன்படுத்துவது ?
 1. இரண்டு ஸ்பூன் வெயிலில் காய வைத்து அரைத்த மாதுளம் பழ தோல் பொடி அத்துடன் ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
 2. இதை பேஸ்ட் போல தயாரிப்பதற்கு ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் அவகோடா எண்ணெய் அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு நறுமண எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
 3. அடுத்தபடியாக, வீட்டிலேயே தயாரித்த இந்த ஸ்கரப்பை கொண்டு உங்கள் முகம் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
 4. சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் மென்மையான மிருதுவான சருமத்தை உணர்வீர்கள். இருந்தாலும் ஸ்க்ரப்பிங் செய்த பிறகு டோனர் மற்றும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த மறக்காதீர்கள்.

 

மாதுளையின் சில மருத்துவ குணங்கள்
 1. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.
 2. புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
 3. மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும்.
 4. இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
 5. மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும்.
 6. பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
 7. மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும்.
 8. மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
 9. மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.
 10. மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண் ணீ ர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
 11. மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button