முகப் பராமரிப்பு

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்..

ஃபேஷியல் செய்யும் முன்.

* எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ண வேண்டும். சருமம் ஃபேஷியல் செய்வதற்கு சரியாக உள்ளதா, இல்லையா என்று பார்க்க வேண்டும். அதிலும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்யும் முன் அழகு நிபுணர்களை பரிசோதிக்க வேண்டும்.

* முகத்தில் பருக்கள் அல்லது பரு இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் கெட்டுவிடும். மேலும் பரு முகம் முழுவதும் பரவி, அழகை கெடுத்துவிடும்.

* ஃபேஷியல் செய்யும் முன் வெயிலில் செல்லக் கூடாது. ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் பட்டால், ஃபேஷியல் செய்த பின்னர், அதன் விளைவு தெரிய வரும். ஆகவே ஃபேஷியல் செய்யப் போகும்முன் நீண்ட நேரம் வெயியில் செல்லாமல் இருப்பது நல்லது. சொல்லப்போனால் வெயில் படாதவாறு ஒரு வாரம் இருந்தால், நல்லது.

ஃபேஷியல் செய்த பின்னர்.

* ஃபேஷியல் செய்த பின்னர், முகத்தை விரல்களால் தேய்க்கக்கூடாது.

* ஃபேஷியல் முடிந்த பின்பு 2 மணிநேரத்திற்கு முகத்தை கழுவ கூடாது. வேண்டுமென்றால் முகம் எண்ணெய் பசையுடன் இருந்தால் மட்டும் தான் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தல், முகத்திற்கு ஆவி பிடித்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. ஏனெனில் ஃபேஷியல் செய்த பின்னர், சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். அந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தால், ஈஸியாக வந்துவிடும். ஆகவே அவற்றையெல்லாம் செய்யாமல், சருமத்தை சற்று ரிலாக்ஸ் ஆக விடுங்கள்.

* ஃபேஷியல் செய்தப் பின்னர், 2-4 மணிநேரத்திற்கு வெயிலுக்கு செல்ல வேண்டாம். இதனால் புறஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்துளைகளையும் பாதிப்படைய செய்யும், பின் ஃபேஷியல் செய்ததே வீணாகிவிடும்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃபேஷியல் செய்ததன் பலனை முற்றிலும் அடைவதோடு, முகம் நன்கு அழகாக, பளபளப்போடு மின்னும்.
3cbfd460 f520 4836 86ad cb4b3f19b128 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button