34.6 C
Chennai
Saturday, Jul 27, 2024
30 garlic bread
சிற்றுண்டி வகைகள்

சுவையான கார்லிக் பிரட் ரெசிபி

பொதுவாக கார்லிக் பிரட்டை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். மேலும் பலருக்கு இந்த கார்லிக் பிரட் பிடித்தமான ஒன்று. இதனை கடைகளில் அதிக பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த கார்லிக் பிரட்டை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதை செய்வது என்பது மிகவும் ஈஸி.

இங்கு அந்த கார்லிக் பிரட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவையுங்கள்.

Garlic Bread Recipe
தேவையான பொருட்கள்:

பிரட் – 4 துண்டுகள்
பூண்டு – 6-7 பற்கள்
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் வெண்ணெய், பூண்டு பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு பிரட் துண்டுகளை எடுத்து, அதனை சுற்றியுள்ளதை நீக்கிவிட்டு, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை முன்னும், பின்னும் தடவிக் கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நெய் தடவி பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கார்லிக் பிரட் ரெடி!!!

Related posts

பனீர் பாஸ்தா

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி

nathan

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேரட் கேக்

nathan

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க்

nathan

கொழுக்கட்டை

nathan

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan

முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி

nathan