31.3 C
Chennai
Saturday, Jul 27, 2024
Gmail New Logo
Other News

உங்களுக்கு தெரியுமா நீங்கள் இறந்தபின் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் டேட்டா என்ன ஆகும் தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட்போன் என்பது ஒரு அத்தியாவசியமாகவே மாறிவிட்டது. பலரும் தனிப்பட்ட தரவுகள், அலுவலக ரீதியான தகவல் முதல் பொதுத் தகவல்கள் வரை வரை பல்வேறு தகவல்களை இணையத்தில் சேமித்து வைக்கிறோம்.

காலத்தால் அழியாதவை என்று நாம் சொல்லும் அளவுக்கு, இந்த தகவல்கள் மற்றும் தரவுகள் (டேட்டா) நாமாக நீக்கும் வரை, இணையத்தில் இருந்துகொண்டு தான் இருக்கும்.

ஆனால், ஒருவர் இறந்து போன பின்பு, இந்த டேட்டா என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான தீர்வை பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ளபோகிறோம்.

பொதுவாக ஒருவர் ஆண்டிராய்டு போன் வைத்திருந்தாலே, மெயில் ஐடி மூலம் உங்கள் தகவலை சேகரிக்க முடியும். அது மட்டுமின்றி, கூகுள் பே, போன் பே பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்துபவராக இருந்தால், உங்கள் வங்கிக்கணக்குகள் விவரம் கூகுளில் சேமிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாகவே, ஒரு மாதக்கணக்கில் வரை நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தாலே, கூகுள் கண்டறிந்தால், உங்கள் கணக்கு செயலிழந்து விடும். இருந்தாலும், உங்களுக்குப் பிறகு, உங்கள் கணக்கை என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கூகுள் மூன்று விருப்பங்களை வழங்குகிறது.

அதில், முதலில் உங்கள் கணக்கு எப்போது செயலிழக்கப்பட வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்ய கூகுள் அனுமதிக்கிறது. இரண்டாவது, உங்கள் கணக்கை நம்பகமான நபருடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதி அளிக்கிறது. மூன்றாவது, உங்கள் கணக்கு செயலிழந்த பிறகு, அதை நீக்க கூகுளுக்கு அனுமதி அளிக்கலாம்.

மேலும், கூகுள் கணக்கு பயன்படுத்தாமல் இருக்கும் போது, கூடுதலாக 18 மாதங்கள் வரை நீங்கள் கணக்கை ஆக்டிவாக வைத்திருக்கும் அம்சத்தை கூகுள் சேர்த்துள்ளது. கணக்கின் இன்ஆக்டிவ் நிலையை, myaccount.google.com/inactive இணைப்பில் சென்று நீங்கள் இதை நிர்வாகிக்கலாம்.

இதில், உங்கள் கணக்கு எவ்வளவு காலம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்ற தகவலை உள்ளிடலாம். கூடுதலாக, மின்னஞ்சல், மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை சேர்க்க வேண்டும்.

இதில், யாரிடம் கணக்கு பற்றிய தகவலை பகிர்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. இத்தகவலை கூகுள் ஒரு மின்னஞ்சல் வழியே நீங்கள் தேர்வு செய்த நபரின் மின்னஞ்சலுக்கு அனுப்பும்.

நீங்கள் பகிர விரும்பும் தகவல் மட்டுமே பகிரப்படும். ஒரு வேளை, உங்கள் தரவை யாருக்கும் நீங்கள் பகிர விரும்பவில்லை என்றால், நீங்கள் மின்னஞ்சலை உள்ளிட வேண்டாம். உங்கள் கணக்கு நீக்கப்பட்டு, உங்கள் தரவு மற்றும் தகவல் அழிந்து விடும்.

manithan

Related posts

வளைகாப்பு நடத்திய யூடியூபர் இர்ஃபான், தங்க சிலை போல் ஜொலித்த ஆசிபா- வைரல் புகைப்படம்

nathan

ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காரணம் என்ன?

nathan

இரவில் காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்…

nathan

மே மாதத்தில் பணத்தை குவிக்கப்போகும் 3 ராசி

nathan

பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய விசித்ரா?

nathan

விஜய் எடுக்கும் அதிரடி முடிவு-கட்சி தொடங்குவது குறித்து லீக்கான தகவல்

nathan

இந்தியாவின் மிகப்பெரிய சக்கரை ஆலைக்கு சொந்தக்காரி!

nathan

மேலாடையை கழட்டிவிட்டு முன்னழகை மொத்தமாக காட்டும் !! நிதி அகர்வால்

nathan

நயன்தாராவின் அண்ணனை பார்த்து இருக்கீங்களா ……அட இந்த பிரபலமா அவரு ……..

nathan