ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இந்த மாதம் மிகவும் சிறந்தது!

நாம் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தை கூட பார்த்து பார்த்து செய்வதில் வல்லவர்கள். கர்ப்பமாவதற்கு எது சிறந்த மாதம் என்று பலரும் யோசனை செய்து கொண்டிருப்பார்கள்.

நீங்கள் குழந்தை பெற நினைத்தால் இந்த மாதத்தில் கர்ப்பமாவது சிறப்பாக அமையும்! இதன் பின்னனியில் சில ஆரோக்கிய காரணங்கள் இருக்கின்றன. அது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பனிகாலம்

நமது ஊர் பனிக்கு மரம் கூட நடுங்கும் என்பது தெரிந்த உண்மை தான். இந்த காலத்தில் கர்ப்பமானால் பராமரிப்பு அதிகமாக தேவைப்படும். தூங்கும் இடம் என அனைத்தும் கதகதப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

வெயில் காலம்

கோடைகாலத்தில் கர்ப்பமானால், உங்களால் ஜீன்ஸ், புடவைகள் போன்ற வெப்பம் மிகுந்த ஆடைகளை உடுத்த முடியாது. அதுமட்டுமின்றி உணவுகள், பழங்கள் என பார்த்து பார்த்து உண்ண வேண்டும். கோடை சாதரணமானவர்களுக்கே சற்று கடுமையாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு என்றால் இன்னும் கொஞ்சம் சிரமம் தான்.

விஞ்ஞானிகளின் கருத்து

மே மாதத்தில் கர்ப்பமாகும் 10% பேருக்கு கர்ப்ப காலம் முடிவதற்கு சற்று முன்னதாகவே குழந்தை பிறந்துவிடுகிறதாம்.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கர்ப்பமாகும் பெண்களின் குழந்தைகளின் எடை 8 அல்லது 9 கிராம் அதிகமாக இருக்கிறதாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

காய்ச்சல் மற்றும் உடல் எடை

மே மாதத்தில் கர்ப்பமாகும் பெண்களின் குழந்தைகள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனைக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் கோடைகாலத்தில் கர்ப்பமாகும் பெண்களின் குழந்தைகளுக்கு அதிக உடல் எடை உண்டாகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வு

இந்த ஆய்வு, 647,050 ஜோடி குழந்தைகளிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் கருவுறுவதற்கு சிறந்த மாதம் எது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாத குழந்தை

ஆய்வு முடிவுகளின் படி ஜீன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் கருவுறுவது மிக சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கரு உண்டாவது என்பது நமது கையில் இல்லை.

குழந்தை பாக்கியம் கிடைப்பதே அரிதானது. இந்த மாதத்தில் கருவுற முடியவில்லையே என நினைக்காமல், குழந்தையை விட சிறந்த செல்வம் எதுவும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button