அழகு குறிப்புகள்

விஜயின் அளவில்லாத பாசம்!– எதிர்பாராத தங்கை மரணம்

விஜய் நடித்து வெளிவந்த தங்கை சென்டிமென்ட் திரைப்படங்களான திருப்பாச்சி, வேலாயுதம் போன்றவை பெருமளவில் வெற்றிபெற்ற திரைப்படங்களாகும். இந்திய நடிகர்களில் பலர் பெண்கள் மத்தியில் ரொமாண்டிக் நாயகனாக வலம் வந்திருக்கலாம். ஆனால், ஆரம்பம் முதல் இன்றுவரை அனைத்து பெண்களும் “அண்ணா” என்று உரிமையாக அழைக்கும் ஒரே இந்திய நடிகர் விஜயாக மட்டுமே இருக்க முடியும்.

இதற்கு காரணம் இவரது நிஜ வாழ்க்கையில் நடந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு தான். ஆம், விஜய்க்கும் வித்யா என்ற செல்லமான தங்கை இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சிறு வயதிலேயே அவர் இறந்துவிட்டார். அவரது இழப்பு விஜயை பெருமளவில் பாதித்திருந்தது. அதனாலேயே, இவருக்கு தங்கைகள் என்றால் மிகவும் பிரியம்…..

விஜயின் அமைதிக்கு பின்னான காரணம்
சிறு வயதில் விஜய் அவ்வளவாக அமைதியான சுபாவம் கொண்டவர் இல்லை. மிகவும் சுட்டியாகவும், துறுதுறுப்பாகவும் தான் இருந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட தங்கை வித்தியாவின் மரணம் தான் இவரது சுபாவம் அமைதியாக மாற ஓர் காரணமாக அமைந்துவிட்டது.

எதிர்பாராத மரணம்
தன்னோடு தினமும் விளையாடிக் கொண்டிருந்த அன்பு தங்கை திடீரென மரணம் அடைந்தது மனதளவில் விஜயை பெரிதாக பாதித்தது.

தங்கையின் பெயரில் அறக்கட்டளை
தனது தங்கையின் பெயரில் வித்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார் விஜய்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கல்வி உதவி
பெரும்பாலும் விஜய் யாருக்கும் தெரியாமல் கல்வி உதவி செய்வதெல்லாம் இந்த வித்யா அறக்கட்டளை மூலமாக தான் என்று கூறப்படுகிறது.

இலவச திருமணம்
தனது தங்கை வித்யாவின் பிறந்தநாள் அன்று நிறைய ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார் நடிகர் விஜய்.

யாராயினும் சந்திப்பது
வித்யா என்ற பெயரில் யார் வந்தாலும், மறுக்காமல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.

பரிசுக் கொடுக்காமல் அனுப்புவது இல்லை
வித்யா என்ற பெயரில் தன்னை சந்தித்துவிட்டு போகும் யாரையும் வெறும் கையோடு விஜய் அனுப்புவது இல்லை. ஏதேனும் பரிசை கொடுத்து தான் அனுப்புவாராம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button