maki
மெகந்திடிசைன்

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா?

பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. உங்களுக்கும் அப்படியென்றால் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தீபாவளி பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

சமையல் எண்ணெய்
மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை
எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ்
மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

கிராம்பு புகை
கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

குறிப்பு
கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

Related posts

உடலில் மஹந்தி அலங்காரம்

nathan

இலகு மகந்தி டிசைன் போடுதல்

nathan

எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் – 1

nathan

கால்களுக்கு போடக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன்

nathan

மருதானி போட எப்படி கற்றுக்கொள்வது?

nathan

மெஹந்தி டிசைன்ஸ்

nathan

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளை அழகுப்படுத்த மெஹந்தி!…

sangika

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்!

nathan

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika